Friday 9 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 30

நாம் என்னென்னசெய்யலாம்?

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவதூறுச்செய்திகளை அள்ளித் தரும் மீடியாக்களை எதிர்கொள்ளவும், நமது நிலையைத்தெளிவுபடுத்தவும் நமக்கென்று பத்திரிகைகள், ​​தொலைக்காட்சி சானல்கள் ஆரம்பிக்கலாம்.

நாம் அடிக்கடி இதுகுறித்து சிந்திக்கிறோம். அதிகமாகப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். பெரிய பெரிய திட்டங்களைப் போடுகிறோம். ஆனால் செயல் என்று வரும்பொழுது அங்கே ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகக் கொஞ்சமான வேலைகளே நடக்கின்றன.

மாற்று ஊடகம் குறித்த நமது செயல்திட்டம் தேசிய அளவிலும் இருக்கவேண்டும். நமது பகுதியின் அளவிலும் இருக்கவேண்டும். அதிகமான உழைப்புகள் இதற்கு தேவைப்படும். அதிகமான பணமும் இதற்காக முதலீடு செய்ய வேண்டி வரும்.

இம்மாதிரித் திட்டங்கள் நம்மிடம் திட்ட அளவிலேயே தங்கிப் போய் விடுகிறது. அதற்கப்பால் அது அசையமாட்டேன் என்கிறது.

நமது நேரம், ஆற்றல், வளங்கள், திறமைகள் ஆகியவற்றை உண்மையிலேயே இதற்காக நாம் செலவழித்தோம் என்றால் அதற்கான பலன்களை நாம் கண்கூடாகக் காணலாம்.

தலைமைக்கு ஏங்கும் தலைமுறைகள்

நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து நாம் இதனைத் தொடங்கி வைத்தால் அது நம்மோடு நின்று போவதுமில்லை. அது நமது தலைமுறையினருக்கு செயல்ரீதியான ஊக்கங்களையும், ஆக்கங்களையும் அள்ளித் தரும்.

நாம் செய்ததை விட பல மடங்கு பெரிதாகவும், ஆழமிக்கதாகவும் அவர்கள் செய்வார்கள்.

ஆம். நமது தலைமுறையினர் தலைமையை எதிர்பார்க்கிறார்கள். அதற்காக ஏங்குகிறார்கள். யாராவது தலைமையேற்று நடத்தினால் உடனே அதனைச் செயல்படுத்த தயாராக இருக்கிறார்கள். யாராவது நல்ல விஷயம் ஒன்றைத் தொடங்கி வைத்தால் அதனைத் தொடங்கியதை விட சிறப்பாகச் செய்ய தயாராக இருக்கிறார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது மட்டும்தான்.

தனிப்பட்ட முறையில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் நாம் வாழும் பகுதிகளில் சிறிய சிறிய செயல் குழுக்களை உருவாக்க வேண்டும்.

ஊடகம் தொடர்பான எந்தப் புதிய திட்டத்திலும் நாம் இறங்குவதற்கு முன்பாக இரண்டு பொன்னான விதிகளை நினைவில் கொள்ளவேண்டும். அந்தத் திட்டம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் சரியே. அவைகளாவன:

1. இடைவெளிகளை நிரப்ப வேண்டும். ஏற்கனவே ஒன்றிருக்க திரும்பச் செய்வது (Duplications) தவிர்க்கப்படவேண்டும்.

2.   தரம் நமது தாரகமந்திரம். அளவைப் பார்த்து தரத்தைக் குறைத்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment