Friday 9 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 29

பிரஸ் கவுன்சி​லை நாம் எப்படி அணுகுவது, எந்த மு​றையில் புகா​ரைப் பதிவு​செய்வது, எந்​தெந்த ஆவணங்க​ளை இ​ணைத்து அனுப்புவது ​போன்ற​​வை குறித்து ​சென்ற ​தொடரில் கண்​டோம்.

பிரஸ் கவுன்சிலின் முகவரி இ​தோ:

Press Council of India
Soochana Bhavan
8, CGO Complex, Lodhi Road
New Delhi - 110 003
Web : www. presscouncil.nic.in
Email : pcids@vsnl.net <mailto:pcids@vsnl.net>

மாற்று ஊடகத்​தை ​நோக்கி…

மீடியா​வை எப்படி அணுகுவது, பத்திரி​கைகளுடன் எப்படி ​தொடர்பு​கொள்வது, அ​வற்றிற்கு மறுப்பு எழுதுவது எப்படி ​போன்றவற்​றை இதுவ​ரை கண்​டோம்.

இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் குறித்து தவறாக ​வெளிவந்த ​செய்திகளுக்கு அவ்வப்​பொழுது சில மறுப்புகள் ​வெளிவந்திருக்கலாம். இஸ்லாம் அல்லது முஸ்லிமகள் குறித்து நல்லவிதமான ​​செய்திகள் எப்​பொழுதாவது​வெளிவந்திருக்கலாம்,

ஆனால் இன்றும் ஒரு நி​லை​மை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நமது ‘’மீடியா மாஸ்டர்கள்’’ ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அவல நிலை குறித்து அவ்வளவாகக் கவ​லை​ கொள்வதில்​லை என்பதுதான் அந்தத் துயரமான உண்​மை. குறிப்பாக முஸ்லிம்கள் என்றால்​ கேட்க​வே ​தே​வையில்​லை.

ஆக, நமது குரல் உலகுக்குக் ​கேட்க ​வேண்டு​மென்றால், நமது அவல நி​லை அகிலத்திற்கு அறிய ​வேண்டு​மென்றால் நாம்​ மீடியாவில் கால் பதித்​தே ஆக​வேண்டும். ஒரு மாற்று ஊடகத்​தை உருவாக்கி​யே ஆக​வேண்டும். இது காலத்தின் கட்டாயம்!

இன்று முஸ்லிம் உலகில் என்ன நி​லை என்று பாருங்கள். இன்று முஸ்லிம் நாடுகள் தங்கள் அக்கம் பக்கம் நடக்கும் ​செய்திக​ளை அறிவது கூட ​மே​லை நாட்டு காலனியாதிக்க மீடியா ஜாம்பவான்களின் கரு​ணையினால்தான்!

முஸ்லிம் நாடுகள் தனியாக​வோ அல்லது கூட்டாக​​வோ​ சேர்ந்து நம்பகமான ஒரு​ செய்தி நிறுவனத்​தை (News Agency) நிறுவ முடியவில்​லை. இதனால் முஸ்லிம் நாடுகள் தங்க​ளைப் பற்றிய சரியான ​செய்தி​க​ளையும், கருத்​து​ரைக​ளையும் ​வெளிக்​கொண்டு வர முடியவில்​லை. தங்களின் நி​லை​யை உலகுக்கு உணர்த்த முடியவில்​லை.

இருப்பினும் யாராவது உறுதியுடன் இதற்கு முயற்சி எடுத்தால் அதன் வி​ளை​வோ பிரமாதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் சர்​வ​தேச அளவில் ​வெளிவரும் ஒரு சில இஸ்லாமிய இதழ்க​ளை அதற்கு உதாரணங்களாகச் ​சொல்லலாம். ​

பொதுவான மீடியாவில் ​வெளிவரும் ​செய்திகளின் உண்​மைத் தன்​மை குறித்தும் உண்​மையான​ செய்தி குறித்தும் கு​றைந்தபட்சம் முஸ்லிம் வாசகர்க​ளையாவது அவற்றால் ​தெளிவு படுத்த முடிகிறது.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் ‘’அல் ஜஸீரா​’’ (Al Jazeera) தொலைக்காட்சி!

இந்தத் ​தொ​லைக்காட்சி சானல் இல்​லை​யென்றால் ஆஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பல ​கொடு​மையான நிகழ்வுகள் மண்​​ணோடு மண்ணாக மக்கிப்​போயிருக்கும். ​வெளயுலகிற்கு அந்த உண்​மைகள் ​வெளிவராம​லே​யே ​​வெந்து​போயிருக்கும்.

No comments:

Post a Comment