Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Saturday, 17 November 2018

தீரன் திப்புவே... - கவிதை

தீரன் திப்புவே...
நீ இன்றிருந்தால்
எங்களுக்கு எவ்வளவு
உதவியாக இருந்திருக்கும்!
நீ இன்றிருந்தால்
குஜராத்தில்
கர்ப்பிணிளைக்கூட
கருவைக் கிழித்து
நெருப்பில் எறிந்து
கரியாக்கினார்களே..
அது நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
நெல்லிப் படுகொலைகளும்
பகல்பூர் படுகொலைகளும்
ஹாஷிம்புராவும்
நடந்திருக்குமா?
நீ இன்றிருந்தால்
ஃபாசிசத்தை வேரோடும்
வேரடி மண்ணோடும்
பிடுங்கி எறிந்திருப்பாயே...
நீ இன்றிருந்தால்
இந்த மனித குல எதிரிகளை
மண்ணில் போட்டு
மாய்த்திருப்பாயே...
அப்பேற்பட்ட ஆங்கிலேயர்களே
உன்னைக் கண்டு
குலை நடுங்கினார்களே...
இந்தப் படுபாவி ஃபாஸிஸ்டுகள்
எம்மாத்திரம் உனக்கு?
எங்களின் ஆதர்ஷ புருஷன் நீ...
எங்களின் எடுத்துக்காட்டு நீ.,..
எங்களின் முன்மாதிரி நீ...
நீ காட்டிய வழியிலேயே...
நீ அடைந்த வழியிலேயே...
நாங்களும் செல்ல
நாடுகிறோம்...
ஆம்...
உன் தீரத்தில் சிறிதளவேணும்
எங்களுக்குக் கிடைக்காதா
என்று ஏங்குகிறேம்...
அதற்காகவே
அல்லும் பகலும்
அயராதுழைக்கிறோம்...
உன்னைப் போன்று தீரர்களாக
உருவாவதற்கு உழைக்கிறோம்
ஒற்றுமையை விழைகிறோம்...
நீ விதைத்த வீரம்
எங்கள் நரம்புகளிலும்
மங்காது ஓடுகிறதென்று
இன்ஷா அல்லாஹ்
ஒரு நாள் நிரூபிப்போம்...
MSAH

Friday, 10 November 2017

ஜும்ஆ தினத்தின் சிறப்புகளும், நன்மைகளும்


ஜும்ஆ தினம்
ஞாயிறு உதிக்கும் தினங்களில்
நல்ல தினம், தலைமை தினம்
என்றார்கள் எம்பெருமானார்
தூய தினத்தின் உத்தமம் அறிந்தால்
தூங்கிக் கழிக்க மாட்டோம்
சோம்பிக் கிடக்க மாட்டோம்
‘என் மீது இந்நாளில் ஸலவாத்தை அதிகரியுங்கள்;
எனக்கு அது காட்டப்படும்’
என்றார்கள் எம்பெருமானார்
வெள்ளிக் கிழமை சிறப்பானது போன்று
வெள்ளி சுபுஹு ஜமாஅத்தும் சிறப்பானது
வெள்ளிதோறும் ஓதும் கஹ்ஃபு சூரா
வெளிச்சம் கொடுக்கும் - அதன் மூலம் கப்ரின்
வேதனையைத் தடுக்கும்
ஜும்ஆவுக்காக என்று குளித்தால் அது நன்மை
அதற்கென்று ஆடையணிந்தால் அது நன்மை
தலைக்கு எண்ணை தேய்த்தால் அது நன்மை
பள்ளிக்குச் சென்று மனிதர்களைத் தாண்டிச் செல்லாமல் 
அமர்ந்தால் அது நன்மை - அவற்றிற்கு
பத்து நாட்களின் சிறு பாவங்கள்
பாசத்துடன் மன்னிக்கப்படும்
வெள்ளியன்று பள்ளி வாயில்களில்
வானவர்கள் வருபவர்களை
வரிசைப்படி பதிவார்கள்
இமாம் மேடையேறினால் ஏட்டை மடிப்பார்கள்
இமாம் உரை கேட்க பள்ளிக்குள் அமர்வார்கள்
அதன்பின் வருபவர்கள் அன்றைய பட்டியலில்
இடம் பெற முடியா இழப்பாளர்கள்
ஜும்ஆவுக்கு வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும்
ஒரு வருடம் நோன்பு, தொழுகையின் நன்மை
முற்கூட்டியே வருபவருக்கு மொத்த நன்மை
முன்வந்தவர்கள் முன்வரிசையில் அமர வேண்டும்
பின்வந்தவர்கள் பின்வரிசையில் அமர வேண்டும்
நேரம் போக்காமல் திக்ரு, ஸலவாத்தும்
ஈரக் கண்களுடன் துஆவும் இறைஞ்சவேண்டும்
ஈருலக வெற்றி தரும் இறைமறை ஓத வேண்டும்
அந்நாளில் உண்டு ஒரு நேரம்
அந்நேரம் இறைஞ்சுதல் ஏற்றுக்கொள்ளப்படும்
அந்நேரம் எதுவென்று அறிவிக்கவில்லை அல்லாஹ்
ஆனால் அஸ்றுக்குப் பின்னுள்ள அறுதி நேரத்தில்
அதனைத் தேடிக்கொள்ளுங்கள்
என்றார்கள் எம்பெருமானார்
அதனால் அந்நாளில் அருமை துஆக்களை அதிகரிப்போம்!

10.11.2017 அன்றைய அமீரக ஜும்ஆ உரையிலிருந்து.

Tuesday, 7 November 2017

ஃபாசிசக் கொள்கையை பாடையில் ஏற்றுவோம்!




மேடையை தகர்க்கிறாயா?
தடை பூச்சாண்டி காட்டுகிறாயா?
தொடை நடுங்கிப் படை கொண்டு
தொல்லைகள் பல தந்தால்
துவண்டு விடுவோம் என்று எண்ணினாயா?
மடை திறந்த வெள்ளமாய்
மாநாட்டுத் திடல் நோக்கி
மக்கள் வரக் கண்டு
மலைத்துப் போய் நின்றாயா?
தனியோனாம் அல்லாஹ்வின்
நனிமிகு துணை கொண்டு
தடை உடைத்து
தடம் பதித்து
தரணியில் தனக்கென்று
தனி இடம் தக்க வைத்த
தன்மானச் சிங்கத்தை
தகர்த்து விடலாம் என்று
பகல் கனவு காணாதே...
பாரதத்தைப் பிளவு படுத்தும் உன்
பாசிச பாதகக் கொள்கையை
பாடையில் ஏற்றுவதே
பாப்புல் ஃப்ரண்டின் பணி...!

#PopularFrontOfIndiaDelhiConferenceNov052017

கணக்கு சொல்வாயா கண்ணாளா?


பணமதிப்பிழப்பு செய்தாய்
பாமரர்களை படுகுழியில் தள்ளினாய்
வங்கி வாசலில்
பரம ஏழைகளையும் பரிதவிக்க விட்டாய்
பண முதலைகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து
பணக்கொழுப்பைப் பரிசாக்கினாய்
பயங்கரவாதத்தை ஒழிப்பேன் என்றாய் – நீ
நோட்டின் பெயரால் கொன்றாய் – உன் பரிவாரம்
மாட்டின் பெயரால் மனிதனைக் கொல்கிறான்
வெறுப்பை விதைத்து வெப்பத்தைக் கூட்டுகிறான்
பகைமை பாசிசத்தை வளர்த்து
மக்களைப் பிளவு படுத்துகிறான் - ஆக
பயங்கரவாதம் கூடியல்லவா இருக்கிறது…!
கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்றாய்
எத்தனை கோடி பிடித்தெடுத்தாய்? - இது
கறுப்பு நாளல்ல – நீ
கணக்கு சொல்லவேண்டிய நாள்…!




Thursday, 27 February 2014

THE CHAMBER OF EMOTIONS!

10ம் வகுப்பு படிக்கும் என் மருமகள் நஜ்லா காதிரா
“இதயம்” பற்றி எழுதிய ஆங்கிலக்  கவிதை!



It's a chamber of  emotions
A juncture of thoughts
A piece of flesh
A lively soul
Which vibrates through & through
All the time
Along with each nerve
And with each pulse
Something called our HEART......!
Most of the time wandering about
Through a path of various emotions
Half of the time happy
Even though some resembles sorrows
Just like an egg
Half filled with yolk of excitement
And the other half with albumin of worries
Basically arrogant
And partly jelous too
Tough to control
When it fumes with anger
And difficult to handle
When it trembles with fear
Some times tensed
And some times cool
Some times jittery
And some times in tremor
Many of them spread out
With the fragrance of love
But some other's
Littered with a blood of hatred
Whatever the emotions are
It is the unit of human life
Until our last breath
It  goes on... on... & on...
Thumping...
Tic... tic... tic...!

N.A. Najla Qadira (10th Std.), My Neice

Friday, 18 October 2013

தொழத் தொடங்கினோம்!


பிறந்தபோது
எங்களுக்கு அழத் தெரிந்தது!
உன்னை
அறிந்தபோதுதானே
தொழத் தெரிந்தது!

தொழத் தொடங்கினோம்
அதனால்
தூக்கத்திலிருந்து
எழத் தொடங்கினோம்!

                                                 - மு. மேத்தா

நூல் : நாயகம் ஒரு காவியம்

இறைவனே அருள்வாய்!


ஏழையாய் வாழ விரும்புகின்றேன் ஆனால்
இரந்துண்டு வாழ விரும்ப வில்லை

கோலச் சிறப்பை விரும்பவில்லை ஆனால்
குடிச்சிறப் பிழக்கவும் விரும்ப வில்லை

ஞாலம் புகழ்ந்திடும் வாழ்வுவேண்டாம் ஆனால்
நயந்தெவர் முன்பும் நிற்க வேண்டாம்

சீலமும் அன்பும் சிறுமையு மற்ற
தெளிவுள வாழ்வினை வேண்டி னேன்தா!

                                                                - கவி. கா.மு. ஷெரீஃப்

நூல் : கவி. கா.மு. ஷெரீஃப் கவிதைகள்
பக்கம் : 464

Friday, 11 October 2013

குத்துவதாய் இருந்தால் இனி நெஞ்சில் குத்துங்கள்!


கணக்கிற்கும் எனக்கும் பிணக்குண்டு அதற்காக
வாழ்வில் நான் போட்ட (மனக்) கணக்கெல்லாம் தப்புக்
கணக்காய்ப் போக வேண்டுமென்பது தலையெழுத்தா என்ன?

நண்பர்கள் என எண்ணிய ஒரு சிலர் என் காசை
உண்பவர்கள் என ஆகிப் போனதேன்!

சொந்த-பந்தங்கள் என எண்ணியவர்கள்
தீப்பந்தங்களாய் மாறிப் போனதேன்!

நெருங்கியவர்கள் என எண்ணியவர்கள் என் கழுத்தை
நெருக்கியவர்கள் என ஆகிப் போனதேன்!

நம்பியவர்கள் எ(ன்)னை வெம்ப வைத்ததேன்!

விதி வலியது - இல்லை இல்லை என் விஷயத்தில்
விதி வலி அது!

குத்துவதற்கென என்னில் இடம் தேடி அலைபவர்களே
குத்துவதற்கென இனி என் முதுகில் இடமில்லை!

ஆகவே
குத்துவதாய் இருந்தால் இனி என் நெஞ்சில் குத்துங்கள்!

இறக்கும் முன்பாவது குறைந்தபட்சம்
குத்தியது யார் என அறிந்து கொள்வேன்!

Monday, 7 October 2013

கண்போன்ற காலத்தை பொன்னென்று எடுத்துக்காட்டி...!


"இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்" நூலினைக் குறித்து கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் காவிரிமைந்தன் (மு. ரவிச்சந்திரன்) அவர்கள் எழுதிய கவிதை


நொடிகூட பெரிதென்று துடிதுடிக்கும் சிவப்புமுள்!
காலத்தைக் காட்டுதற்கு சுற்றிவரும் சிறியமுள்!
நிமிடத்தை அளந்தெழுத இயக்கமெனும் பெரியமுள்!
கடிகாரம் தனிலுள்ள இவைகாட்டும் நேரத்தை………………

ஐவேளைத் தொழுகையெனும் அல்லாஹ்வின் நியதிகளுடன்
இஸ்லாத்தின் கடமைகளும் இடையிடையே இணைத்து
‘ஜகாத்’ ‘நோன்பு’ ‘ஹஜ்’ புனித யாத்திரை – இவையாவும்
காலத்தோடு இணைந்திருக்கும் தன்மைதனை புரியவைத்து……

அரியபல தகவல்களை ஆர்வமுடன் திரட்டியங்கே
அழகியதோர் நூல்வடிவில் வழங்கியுள்ள ஆசிரியர்
திருமறையில் தினம்தோய்ந்து உளமுருகி இறையோனின்
பரிபூரண நல்லாசிகளால் உருவாக்கிய காரணத்தால்……………..

மேற்கோள்கள் சிறுகதைகள்.. உவமையுடன் உதாரணங்கள்
மேலும்மேலும் படிப்பதற்கு உகந்தாற்போல் உரைநடைகள்
சிறப்புகள் பல சேர்ந்து சீராக வடித்த நூலாய்…
மறுமைக்கும் வழிகாட்டும் மறைநாதப் புதுப்புனலாய்……..

ஆன்மீக நெறியோடு அறிவுக்கண் கொண்டு
கண்போன்ற காலத்தை பொன்னென்று எடுத்துக்காட்டி
இன்னுமொரு நூல்வடிவம் எளியநல் தமிழ்நடையில்
இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்!!

தக்கதோர் நூலினை தமிழிலே தந்திருக்கும்
தகைசார்ந்த ஆசிரியரை உளமாறப் பாராட்டுகிறேன்!

காவிரிமைந்தன்