சதியா? அறியாமல் நேர்ந்ததா?
“எனது பெயர் ஜனாஸா” என்ற எனது கட்டுரையில் வெளியிட்ட படத்தில் பொறிக்கப்பட்டிருந்த அரபி வாசகங்கள் தவறான பொருளைக் கொடுக்கின்றன.
அதாவது, “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் படும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதற்குப் பதிலாக, “வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ் இல்லை” என்று பொருள் படும் “லா இலாஹ அல்லாஹ்” என்று உள்ளது. (நஊதுபில்லாஹ்!)
![]() |
| அரபி வாசகம் “லா இலாஹ அல்லாஹ்” என்று உள்ளது. |
கீழக்கரையைச் சார்ந்த என் மரியாதைக்குரிய ஹமீது கான் காக்கா அவர்கள் (ETA Ascon, Dubai) இதனைச் சுட்டிக்காட்டினார்கள். உடனே அந்தப் படத்தை என் வலைப்பூவிலிருந்து எடுத்துவிட்டு, வேறு படத்தைப் போட்டு விட்டேன்.
தக்க தருணத்தில் சுட்டிக்காட்டிய ஹமீது கான் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி.
இந்த வாசகங்கள் அந்தப் படத்தில் வேண்டுமென்று போடப்பட்டதா, இஸ்லாமிய எதிரிகளின் சதியா, அல்லது அறியாமல் நேர்ந்து விட்டதா என்று தெரியவில்லை. இதனைக் குறித்த விவரம் யாருக்காவது தெரிந்தால் தயைகூர்ந்து எனக்குத் தெரியப்படுத்தவும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
இந்தப் படத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்தப் படத்தை வேறு எங்காவது கண்டால் உடனே சம்பந்தப்பட்டவர்களுக்கு இதன் விபரீதத்தை அறியத் தருமாறும் கேட்டுக்கொள்கிறேன். முகநூல் நண்பர்கள், வலையுலக நண்பர்கள் இதில் ஒரு கண் வைத்திருக்கவும்.
அல்லாஹ் போதுமானவன்.
MSAH

No comments:
Post a Comment