Friday, 9 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 28

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது நாம் ஏற்க​ன​வே பார்த்தபடி சட்டரீதியான அதிகாரம் ​கொண்ட ஓர் அ​மைப்பு.

பிரஸ் கவுன்சில் (விசார​​ணைக்கான மு​றை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் கீழ் யார்​வேண்டுமானாலும் பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்.

பாதிக்கப்பட்ட மனித​ரோ, ​நேரடியாக ஈடுபட்ட மனித​ரோதான் புகார் அளிக்க​வேண்டும் என்றில்​லை. பத்திரி​கைத்து​றையின் ​தொழில் தர்மம் மீறப்பட்டதாக ​​​பொதுமக்களில் யார் கவனித்தாலும் அவர்கள் இத​னை பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்குக் ​கொண்டு வரலாம்.

பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கும் முன்பு அல்லது வழக்கு பதிவு​ செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட பத்திரி​கைக்கு அல்லது ​செய்தி நிறுவனத்துக்கு அல்லது பத்திரி​கையாளருக்கு மறுப்பு அளித்திருக்க​​ வேண்டும். அதாவது​செய்தி​ வெளிவந்தவுடன் அதற்கான மறுப்புக் கடிதத்​தை அவர் அனுப்பியிருக்க​ வேண்டும்.

பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கும்​ பொழுது அந்த மறுப்புக் கடிதத்​தையும் சம்பந்தப்பட்ட பத்திரி​கையிலிருந்து பதில் எதுவும் வந்திருந்தால் அத​னையும் இ​ணைத்துக்​ கொடுக்க​ வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரி​கையிலிருந்து உரிய கால அளவில் பதில் வரவில்​லை​யென்றால் அத​னைப் பற்றிக் கவ​லைபப்படத்​ தே​வையில்​லை. நாம் அனுப்பிய மறுப்புக் கடிதத்​தை மட்டும் இ​ணைத்தால் ​போதுமானது.

பிரஸ் கவுன்சிலில் புகார் அளிப்பவர் சம்பந்தப்பட்ட பத்திரி​கையின் அல்லது​ செய்தி நிறுவனத்தின் அல்லது ஆசிரியரின் அல்லது​ செய்தியாளரின்​ பெய​ரையும் முழு  முகவரி​யையும் ​கொடுக்க ​வேண்டும். அத்​தோடு மறுப்புக்குரிய அந்தச்​​ செய்தியின் மூலப் பிரதி​யையும் (original) இ​ணைக்க ​வேண்டும். மறுப்புக்குரிய ​செய்தி காட்சியாக (visual) ​வெளிவந்திருந்தால் அந்தச்​ செய்தியின் பகுதி​யை (clipping) ஒரு குறுந்தகட்டில் (CD) பதிவு​ செய்து புகாருடன் இ​​ணைத்து அனுப்ப​ வேண்டும்.

பிரஸ் கவுன்சில் (விசார​​ணைக்கான மு​றை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் பிரிவு 14 (1)ன் அடிப்ப​டையில் இந்தச்​ செய்தி எப்படி மறுப்புக்குரியது என்ப​தை புகார் அளிப்பவர் தனது புகாரில் விவரிக்க​ வேண்டும்.

அந்த மறுப்புக்குரிய ​செய்தி ஆங்கிலமல்லாத​ வேறு​​ மொழியில் இருக்குமானால் ஆங்கிலத்தில் அந்தச்​ செய்தி​யையும் அதற்கு நாம் அனுப்பிய மறுப்​​பையும் ​மொழி​​பெயர்த்து அனுப்ப ​வேண்டும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 27

பிரஸ் கவுன்சி​லை அணுகுதல்

ஊடகத்தில் எதுவும் அநீதி நடந்தால் அத​னை மு​றையிட்டு நீதி​பெறுவதற்குரிய சட்டரீதியான அதிகாரம் ​கொண்ட அ​மைப்புதான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. இதன் த​லைவராக ஓய்வு​ ​பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்.

சட்ட ரீதியான அதிகாரம் என்றவுடன் வானளாவ அதிகாரம் ​கொண்டது என்று எண்ணி விட​ வேண்டாம். அந்த அளவுக்​கெல்லாம் அதிகாரம் கி​டையாது. இருந்தாலும் பிரஸ் கவுன்சிலின் பார்​வை, கருத்துகள் மீடியா உலகில் கவனத்தில்​கொள்ளப்படுகின்றன.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா குறித்த விவரங்களுக்குள் ​போகும் முன்பு சமீபத்தில் அதன் த​லைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி மார்க்கண்​டேய கட்ஜு தற்​போ​தைய மீடியா குறித்துச் ​சொன்ன ஒரு சில முக்கியமான கருத்துக​ளை இங்​கே பதிவ ​செய்வது​ ​​பொருத்தமாக இருக்கும்.

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சி.என்.என். & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் ‘’டெவில்ஸ் அட்வகேட்’’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் அ​னைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளன.

அந்த கேள்வி & பதில் நிகழ்ச்சியின் முக்கியமான பகுதிகள் வருமாறு:

கரன் தாப்பர்: சமீபத்தில்   சில பத்திரிகை மற்றும் டீவிஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா  பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள்.  மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு  ஏமாற்றம் தருகிறதா?

மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.

மார்கண்டேய கட்ஜு: நிச்சயமாக இல்லை.கரன் தாப்பர்: உண்மையாகவா சொல்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு: உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள்  நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன். 

கரன் தாப்பர்: உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின்  கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?

மார்கண்டேய கட்ஜு: ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை  குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.  

கரன் தாப்பர்: இந்தியாவில் அப்படி  நடக்கவில்லை என்கிறீர்களா?

மார்கண்டேய கட்ஜு: இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ்  பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள  கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்க விடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.

கரன் தாப்பர்: அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?

மார்கண்டேய கட்ஜு: இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. 

நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால்  பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.

கரன் தாப்பர்: ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு:  ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை  பொருள் - ஓப்பியம் மாதிரி.  ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது - அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.

கரன் தாப்பர்: மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?

மார்கண்டேய கட்ஜு: இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ஊரில்  குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்  ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின்  கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்  ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம்  பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி  தெரியும் என்றால் எஸ்எம்எஸ். வந்தது, இமெயில் வந்தது என்று  காட்டுகிறார்கள்.

எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு  விஷமி அனுப்பியிருக்கலாம். அதைப் பெரிதாக ​தொ​லைக்காட்சியில் காட்டி  மறுநாள் பத்திரிகைகளிலும்  பிரசுரிக்கும்போது  என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள்,  தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக  இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான்  உண்மை.

கரன் தாப்பர்: மீடியா இந்த விஷயத்தில் கவனக்கு​றைவாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதைப் பரி​​சோத​னை ​செய்யாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி  செய்வதாக நினைக்கிறீர்களா?

மார்கண்டேய கட்ஜு: மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

கரன் தாப்பர்: மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

மார்கண்டேய கட்ஜு: குண்டு வெடித்த சிறிது  நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?

மார்க்கண்​​டேய கட்ஜு ​கொடுத்த விரிவான ​பேட்டியில் மீடியா குறித்தும், மீடியா முஸ்லிம்க​ளைப் பார்க்கும் விதம் குறித்தும் ​சொன்ன கருத்துக​ளை மட்டும் இங்​கே சுட்டிக்காட்டியுள்​ளோம்.

மிகப் ​​பெரிய பதவியிலுள்ள, முஸ்லிமல்லாத ஒருவர் இந்திய மீடியா குறித்து​சொன்ன இந்தக் கருத்துக​ளை மீடியா எந்த அளவுக்கு உட்​கொண்டுள்ளது என்று தெரியவில்​லை. ஏ​னெனில் ​முஸ்லிம்களின் ​மேல் அ​தே பாரபட்சமும், தவறான பார்​வையும் ​தொடர்ந்து ​கொண்​​​டேதான் இருக்கிறது.

இனி பிரஸ் கவுன்சில் பற்றிப் பார்ப்​போம்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 26

தொ​லைக்காட்சியில் நடக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் நம்மால் எளிதாகத் தலையிட முடியும். அந்த நிகழ்ச்சியில் கலந்து​கொள்ளும் நபர்க​​ளை நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் முழு​மையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் நமக்கு அனுகூலம். கலந்து​கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கி​டைத்தால் அத​னை முழு​மையாகப் பயன்படுத்த ​வேண்டும்.
கேமராவின் முன்பாகப் ​பேசுவதற்கு சில திற​மைக​ளை வளர்த்துக்​கொள்ள​வேண்டும். திற​மைகள் என்றதும் பயந்துவிட​வேண்டாம். சாதாரண விஷயங்கள்தாம். ​கேமராவின் முன்பாக அ​​மைதியான மனநி​லையுடன் காட்சியளிக்க ​வேண்டும். படபடப்பாகக் காணப்படக்கூடாது. இன்முகத்துடன், இனி​மையாகப் ​பேச​வேண்டும்.

நிதானமாக, ​தெளிவாகப் ​பேச​வேண்டும். ​நேரடி ஒளிபரப்பின் நடுவில் நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் ஒரு வார்த்​தை​யைக் கூட​ ​வெட்ட முடியாது. இது நமக்கு சாதகமானது. ​தொ​லைக்காட்சிச் சானல்களில் நடக்கும் விவாதங்கள் நி​றைய ​​பே​ரைத் தூக்கி விட்டுள்ளது. சில​ரை அமுக்கியும் விட்டுள்ளது.

அ​மெரிக்காவில் நடந்த வாட்டர்​கேட் ஊழல் மிகப் பிரபலமானது. அது சம்பந்தமாக அ​மெரிக்க ​​தொ​லைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்து​கொண்ட அ​மெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மிகவும் தளர்ந்து, ​சோர்ந்து காணப்பட்டாராம். அது​வே மிகப்​பெரிய விவாதப்​பொருளாகி அவர் தனது பதவி​யை இராஜினாமா ​செய்ய​​ வேண்டி வந்தது என்று கூறுவார்கள்.
கேபிள் டிவி

இன்று ​கேபிள் டிவிக்கள் மிகப் பரவலாகிவிட்டன. ​கேபிள் ஆப்ப​ரேட்டர்கள்தாம் இன்று ஸ்டுடி​யோவுக்கும் ​நேயர்களுக்கும் இ​டையில் உள்ளவர்கள். அத்​தோடு ​கேபிள் ஆப்ப​ரேட்டர்கள் அவர்களாக​வே பல நிகழ்ச்சிக​ளை ஒளிபரப்புகிறார்கள். அவர்க​ளோடும் நமது ​​தொடர்புக​ளை வலுப்படுத்திக்​​கொள்ள​வேண்டும். நீங்கள் ​கேபிள் ஆப்ப​ரேட்டராக இருந்தால் ​கேபிள் ஆப்பரேட்டர் சங்கத்தில் இ​ணைந்து​கொள்ளுங்கள். நமது நிகழ்ச்சிக​ளை அவர்களும் ஒளிபரப்பிட ஆவன​ ​செய்யுங்கள்.

தணிக்​கை வாரியம் (Censor Board)

தி​​ரைப்படங்க​ளையும், வீடி​யோக்க​ளையும் தணிக்​கை ​செய்வதற்காக சட்டரீதியாக உருவாக்கப்பட்ட அ​மைப்புதான் தணிக்​கை வாரியம். அதில் நாம் அழுத்தம் ​கொடுப்பது மூலம் தீய விஷயங்க​ளைப் பரவ விடாமல் தடுக்கலாம். இன்று முஸ்லிம்களுக்​​கெதிராக பல தி​ரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆபாசங்கள், வன்மு​றைக் காட்சிகள் இல்லாத படங்க​ளே இல்​லை எனலாம். இதெல்லாம் எதனால் ஏற்படுகிறது? தணிக்​கை வாரியம் சரியாகச்​செயல்படாததனால் வந்த வி​ளை​வே இது.

நாம் இதில் பலமான அழுத்தத்​தைக் ​கொடுக்குமளவுக்கு நமது ​செல்வாக்​கை அதிகரித்துக்​கொள்ள ​வேண்டும். சில சமயம் தனி மனிதனால் இத​னைச் சாதித்திட முடியாமல் ​போகலாம். அவ்​வே​​ளை அ​​மைப்புகள் மூலம் அதற்கு அழுத்தங்கள் ​கொடுக்க​வேண்டும். இவ்வாறு ​செய்தால் நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்ல விஷயங்கள் கி​டைக்கும். ஆபாசம் ஓரளவாவது கட்டுப்படுத்தப்படும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 25

நமது​ தொ​லைக்காட்சிச் சானல்களில் வரும் நிகழ்ச்சிகளில் ​பெரும்பாலான​வை முற்கூட்டி​யே தயாரிக்கப்பட்ட​வை, முன்ன​ரே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட​வை. ​நேரடி கலந்து​ரையாடல் நிகழ்ச்சிகள் கூட எல்லாம் நாடகமயம்தான். அவர்கள் மக்களின் பிரதிநிதிக​ளை அ​ழைப்பது​போலிருக்கும். ஆனால் அவர்கள் விரும்பும் மக்க​ளைத்தான் அ​ழைப்பார்கள். அவர்கள் விரும்பும் ​கேள்வி​க​ளை மட்டும்தான் ​கேட்பார்கள். அவர்கள் விரும்பும் பதில்கள்தான் வரும். அப்படி​யே மாற்றமான பதில்கள் வந்தால் கத்திரி வி​ளையாடிவிடும்.

இப்​பொழுது அந்த நி​லை ​கொஞ்சம் மாறி வருகிறது. 2007ம் ஆண்டு இறுதியில் கரன் தாப்பர் சிஎன்என் ஐபிஎன் ​தொ​லைக்காட்சியில் ந​ரேந்திர​மோடியுடன் நடத்திய ​நேர்காணல் இதற்கு சிறந்த உதாரணம். ​நேர்காணல் துவங்கிய ஒரு சில நிமிடங்களி​லே​யே குஜராத் இனப்படு​கொ​லை சம்பந்தப்பட்ட​கேள்விகளுக்கு பதில் ​சொல்ல முடியாமல் திக்கித் திணறிய ​மோடி, வியர்த்து விறுவிறுத்து, தண்ணீ​ரை மடக்​கென்று குடித்து ​பேட்டி​யை நிறுத்தி விடுவார்.

இப்படி ஆரம்பத்தில் அதிகமாக நாடகமயமாக இருந்த இந்த ​நேர்காணல் நிகழ்ச்சிகள் இப்​பொழுது ​கொஞ்சம் யதார்த்தத்திற்கு வந்துள்ளது. இதற்கு மக்களின் விழிப்புணர்வும் ஒரு காரணம்.

முன்​பைப் ​போலல்லாமல் இப்​பொழுது இந்த மாதிரி ​நேர்காணல் நிகழ்ச்சிகளில் ​பொதுமக்கள் கலந்து​கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்​பை நாமும் பயன்படுத்திக்​கொள்ள​வேண்டும். ​தொ​லைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுடன் ​தொடர்புக​ளை வலுப்படுத்திக்​கொள்ள​வேண்டும். ​நேர்காணல், சமீபத்தில் மிகவும் பிரபலமாகியுள்ள ரியாலிட்டி​​ஷோக்கள் ஆகியவற்றில் கலந்து​கொள்ளும் வாய்ப்புகள் கி​டைத்தால் தவறாது நாம் கலந்து​கொள்ள​​வேண்டும். அத்​தோடு நம் கருத்துக​ளை​தைரியமாக, ஆணித்தரமாக எடுத்து ​வைக்க​வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் என்பதால் நமது ​பேச்சு​தெளிவாக இருக்க​வேண்டும். அ​தே சமயம் இஸ்லாம் ​போதித்துள்ள சங்​கைக​ளைக் கடைப்பிடித்து, கண்ணியமான வார்த்​தைக​​ளைக் ​கையாள​வேண்டும். ஒரு முஸ்லிம் இப்படித்தான் இருப்பான் என்ப​தை அங்​கே ப​றை சாற்ற​வேண்டும். இஸ்லாம் இயம்பியபடி நல்ல ஆ​டைக​ளை அணிந்து, அல்லாஹ் விரும்பியபடி அலங்கரித்துக்​கொண்டு ​செல்ல​வேண்டும். நீண்ட நீண்ட வார்த்​தைக​ளைச் ​சொல்லி காண்​போ​ரைக் கடுப்​​பேற்றாமல் நறுக்​கென்று சுருக்கமாக, இனி​மையாகப் ​பேச​வேண்டும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 24

மின்னணு ஊடகங்கள்
தொ​லைக்காட்சியின் அசுர வளர்ச்சியும், பயன்பாடும், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபரிமிதமான ஆர்வமும், மிக எளிதாகப் ​போய்ச்​சேரும் அதன் தன்​மையும் மின்னணு ஊடகங்களில் நமது த​லையீட்டின் அவசியத்​தை வலியுறுத்தி நிற்கின்றன.

ஒரு காலத்தில் ​தொ​லைக்காட்சி என்றா​லே தூர்தர்ஷன்தான். புதன்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் ‘’ஒலியும் ஒளியும்’’ மிகவும் பிரபலம். தவமாய்த் தவமிருந்து அத​னைக் கண்டு களித்​​தோர் பலர். ‘’ஒலியும் ஒளியும்’’​ ஒளிபரப்பப்படும் நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அந்த ​வெட்​டைச்​செய்தவருக்கு மட்டுமல்ல, அவரது பல தலைமு​றைகளுக்கும் திட்டுகள் விழும்.

இப்படிப்பட்ட தூர்தர்ஷன் இன்று அத்த​னை மவுசும் இழந்து அதிகம் பார்க்கப்படாத ​தொ​லைக்காட்சியாக மாறியுள்ளது. இதற்கு தனியார்​ தொலைக்காட்சிச் சானல்களின் வரவும், அவற்றின் அசுர வளர்ச்சியும்தான் காரணம்.

காட்சி ஊடகம் ஏற்படுத்தும் தாக்கம் அபரிமிதமானது. ஹிந்துத்துவாவின் வளர்ச்சிக்கும், வண்ணத் ​தொ​லைக்காட்சிகளின் வரவுக்கும் மிகுந்த சம்பந்தம் உண்டு. வண்ணத்​தொ​லைக்காட்சிகள் வந்த பின்தான் ஹிந்துத்துவாவின் வளர்ச்சி அதிகமானது. நடுத்தர வர்க்கத்தினரும்,​​தொழில்நுட்ப வல்லுனர்களும் ஹிந்துத்துவாவில் இ​ணைய இது​வே காரணமானது.

காட்சி ஊடகம் துவக்கம் முத​லே கலாச்சார அளவிலும், மதத்தின் அடிப்ப​டையிலும் சிறுபான்​​மையாக இருக்கும் மக்க​ளை எதிரிகளாக​வே காட்ட மு​னைந்து வந்துள்ளது.

நிதர்சனமான நிழற்படங்களின், விதவிதமான சப்தங்களின், நவீன இசைகளின், காட்சிகளின் உலகில் நாம் வாழ்ந்து வருகின்​றோம். என​வே இத​னை நாம் எதிர்​கொண்​டே ஆக​வேண்டும்.

அச்சு ஊடகத்​தைப் ​போல​வே மின்னணு ஊடகமும் சந்​தையின் அழுத்தங்களுக்கும், ​வெளியிலிருந்து வரும் அழுத்தங்களுக்கும் பணிந்து​போகின்ற சூழ்நி​லை​யே உருவாகியுள்ளது. என​வே உண்​​மைக்குப் புறம்பான ​செய்திகள் ​வெளியாகும்​பொழுது அதன் பின்னணியிலுள்ள மக்க​​ளை நாம் சந்திக்க​வேண்டும். அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரிலிருந்து த​லை​மை நிரவாகி வ​ரை சந்திக்க​வேண்டும்.

அன்புக்கும், பணிவுக்கும், கனிவான ​​ந​டைமு​றைக்கும் என்று​மே மதிப்பு உண்டு. ​வெறும் ​கோபத்​தைக் ​கொப்பளிக்கும் ​செயல்பாடுக​ளோ, அதிகப்படியான எதிர்நடவடிக்​​கைக​ளோ ஒரு பல​னையும் தராது.

நம்மால் ​நேரடியாகச் ​சென்று பார்க்க முடியாவிட்டால் கடிதம் மூலமாக​வோ, ​தொ​லை​பேசியி​லோ, மின்னஞ்சல் மூலமாக​வோ நமது கருத்துக​ளைத்​தெரிவிக்கலாம்.

நல்ல சாங்கியமான ​சொற்களில் தவ​றைச் சுட்டிக்காட்ட​வேண்டும். நமது கருத்துகளுக்கு ஆதரவான ஆதாரங்க​​ளை எடுத்துக்காட்ட​வேண்டும்.

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 23

பத்திரி​கையாளர்களுடன் ​தொடர்புக​ளை வலுப்படுத்துங்கள்

தனிப்பட்ட மு​றையில் நட்புக​ளை வளர்த்துக்​கொள்வது பல வழிகளிலும் நன்​மை பயக்கும். நல்ல ஒரு முஸ்லி​மை நண்பனாகக் ​கொண்ட ஒரு பத்திரி​கையாளர் அந்த முஸ்லிம் சார்ந்த சமுதாயத்திற்​கெதிராக எழுதுவதற்கு ஒரு தட​வைக்கு பல தட​வை ​யோசிப்பார். இஸ்லாத்திற்​கெதிராக எழுதுவதற்கு இஸ்லாம் பற்றிய அறியா​மையும், முஸ்லிம்களுடனான ​தொடர்பின்​மையும்தான் மிக முக்கிய காரணம்.

ஆதலால் உங்களுக்கு அருகில் ஊடகத்தில் ​தொடர்பு​டையவர் யார் இருக்கிறார் என்ப​தை முதலில் அறிந்து ​கொள்ளுங்கள். நகரங்களில் வசிப்பவர்கள் உங்கள் வார ​வே​லைத் திட்டத்தில் ஊடகவியலாளர்க​ளைச் சந்திப்ப​தையும் ஒரு ​வே​லையாகச் ​சேர்த்துக்​கொள்ளுங்கள். இது மிக்க பலன்க​ளைத் தரும்.

ஊடகக் கண்காணிப்பு (Media Watch) குழுக்க​ளை உருவாக்குங்கள்

கடிதம் எழுதுவது, ​​தொ​லை​​பேசி அ​ழைப்புகள், தனிப்பட்ட ​தொடர்புகள், இன்னபிற ஊடகம் சம்பந்தமான ​செயல்பாடுகளுக்கு ஓர் ஒழுங்கு மு​றை, ​தொடர் கண்காணிப்புகள் அவசியம்.

ஆதலால் உங்கள் பகுதிகளில் ஊடகக் கண்காணிப்புக் குழுக்க​ளை உருவாக்குவது குறித்து சிந்தியுங்கள். இந்தக் குழுவில் உள்ளவர்கள் படித்தவர்களாகவும், ஊடகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து அறிந்தவர்களாகவும் இருக்க​வேண்டும். ஊடகம் சம்பந்தமாக ஏதாவது ​வே​லைகள் ​கொடுக்கப்பட்டால் அத​னைச் ​செய்வதற்கு ​நேரம் ஒதுக்கக்கூடியவராகவும் அவர் இருக்க​வேண்டும்.

நீங்கள் இவ்வளவு முயற்சி ​செய்தும் நீங்கள் ​​தொடர்பு ​கொண்ட தினப் பத்திரி​​கை​யோ, ​தொ​லைக்காட்சிச் சான​லோ உங்கள் கருத்துக​ளைக் ​கேட்க மறுக்கலாம்.
வெளியிடப்பட்ட ஒரு ​செய்திக் குறிப்பா​லோ, ஒரு கட்டு​ரையா​​லோ நீங்கள் ​நேரடியாகப் பாதிக்கப்பட்டால், அந்தச் ​செய்திக்கு நீங்கள் அனுப்பிய மறுப்​பை அவர்கள் ​வெளியிட மறுத்தால் அதற்குப் பரிகாரமாக பல வழிகள் உள்ளன.
இனி அடுத்ததாக இன்ஷா அல்லாஹ் மின்னணு ஊடகங்கள் குறித்து பார்ப்​போம்.

சமூக சேவையில் முஸ்லிம்கள்!


“இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை“ (அத் தாரியாத் 51:56) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வுக்கு கடமை செய்வது என்பது இரு வகைப்படும். முதலாவது - அவனை, அவனை மட்டுமே வணங்குவது. இரண்டாவது - அவனது படைப்புகளுக்கு சேவை புரிவது.

அதாவது, ஹுகூகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய கடமை), ஹுகூகுல் இபாத் (மனிதகுலத்திற்கு செய்யவேண்டிய கடமை). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப் போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (சூரா அன்னிசா 4:36)

மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். (சூரா அத் தஹ்ர் 76:8)

ஆக, மனித குலத்திற்கு சேவை செய்வது என்பது அல்லாஹ்வை அஞ்சும் மனிதருக்கு இன்றியமையாததாகும்.

கீழ்க்கண்ட வசனம்தான் இஸ்லாம் இயம்பும் சமூக சேவையின் கோட்பாடு, (The Concept of Social Work in Islam). பயபக்தியுடையவர்களின் குணநலன்களை அல்லாஹ் இந்த வசனத்தில் தெளிவாக விளக்கியுள்ளான்.

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள்தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)

தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்புவதுதான் சமூக சேவையின் முதல் படி.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''தனக்கு விரும்புவதையே தன் சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (புகாரீ)

மேலும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவர் அந்தச் சகோதரருக்கு அநீதி இழைக்கமாட்டார். அவரை விரோதியிடம் ஒப்படைக்கவும் மாட்டார். எவர் தன் சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறாரோ அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறான். எவர் முஸ்லிமின் ஒரு துன்பத்தைப் போக்குகிறாரோ (அதற்கு கூலியாக) அல்லாஹ் அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அதற்காக அல்லாஹ் மறுமை நாளில் அவரது குறைகளை மறைக்கிறான்.'' (புகாரீ, முஸ்லிம்)

இறைத்தூதரின் இன்னொரு கூற்று: ''சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும், இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்து வைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன் மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவதும் தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப்பவற்றை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமாகும்.'' (புகாரீ, முஸ்லிம்)

சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்க்கும் இஸ்லாம், இஃதிகாஃப் இருப்பதை விட தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதற்காக சில எட்டுகள் நடப்பதை சிறந்ததாக்கியுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதற்காக நடக்கிறாரோ அது அவர் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதை விட மேலானதாகும். எவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி ஒரு நாள் இஃதிகாஃப் இருக்கிறாரோ அவருக்கும் நரக நெருப்புக்குமிடையே அல்லாஹ் மூன்று குழிகளை ஏற்படுத்துகிறான். அந்த ஒவ்வொரு குழியும் கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே உள்ள தூரத்தை விட அதிக தூரமுடையதாயிருக்கும்.'' (இப்னு அப்பாஸ் (ரழி), முஃஜமுத் தப்ரானீ)

இப்படிப்பட்ட புனிதமான சமூக சேவையில்தான் முஸ்லிம்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ளார்கள். முஸ்லிம்களில் ஒரு சாரார் இதற்காக தங்களையே அர்ப்பணித்துள்ளனர்.

அவர்கள் ஏழைகளுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்கிறார்கள். வசதியற்ற வறியவர்களுக்கு வாழ்வளிக்க பாடுபடுகிறார்கள். வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும் முனைகிறார்கள். சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கவும், அவர்களது குடும்பங்களுக்கு உதவிடவும் முயற்சிகள் பல செய்கிறார்கள்.

பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் இளம் சிறார்களை பள்ளிக்குச் செல்ல ஊக்குவிக்கிறார்கள். அதற்காக பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். வறுமையில் கல்வி பயில இயலாதவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்து படிக்க வைக்கிறார்கள்.

வேலைவாய்ப்பில்லாதவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு அரசிடமிருந்து உரிய உதவிகளையும் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஏழைகளுக்கு உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்கிறார்கள். கிராமங்கள் தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துகிறார்கள்.

இஸ்லாம் போதித்த முறைப்படி தங்கள் வாழ்வை அமைத்துகொண்டுள்ள இவர்களுக்குத்தான் இறைவன் மாபெரும் நற்கூலிகளை வழங்கக் காத்திருக்கிறான். அல்லாஹ் இவர்களுக்கு அவனது அன்பையும், அருளையும் என்றென்றும் பொழிவானாக.

விடியல் வெள்ளி  செப்டம்பர் 2014

Monday, 5 January 2015

இறையச்சமுடையோரின் இலக்கணங்கள்!


“சுவனம் இறையச்சமுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” என்று இறைவன் சூரா ஆல இம்ரானில் 133வது வசனத்தில் கூறுகிறான்.

இந்த இறையச்சம் என்ற தக்வா என்றால் என்ன?

இரண்டு நபித்தோழர்கள் வழி இதனை நாம் அறிந்து கொள்வோம். ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்கும், உபை இப்னு கஅப் (ரலி) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல் வருமாறு:

உமர் (ரலி): உபையே! தக்வா என்றால் என்ன?
உபை (ரலி): நீங்கள் முட்கள் நிறைந்த பாதையில் நடந்திருக்கிறீர்களா?
உமர் (ரலி): ஆம். நடந்திருக்கிறேன் தோழரே…
உபை (ரலி): எப்படி நடப்பீர்கள்?
உமர் (ரலி): எனது ஆடைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு, எந்த இடத்தில் முள் இல்லையோ அந்த இடத்தில் பாதங்களை வைத்து எச்சரிக்கையாக நடப்பேன்.
உபை (ரலி): அதுதான் தக்வா!

இந்த உலகத்தில் ஒவ்வொரு கணமும் நாம் இப்பாழுது செய்யக்கூடிய காரியம் அல்லாஹ்வுக்கு பிடிக்குமா? பிடிக்காதா? இதில் அல்லாஹ்வின் பொருத்தம் இருக்கிறதா? அல்லாஹ்வின் கோபம் இருக்கிறதா? இப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எச்சரிக்கையுடன் செய்வதுதான் தக்வா.

ஒரு முறை அலீ (ரலி) அவர்களிடம் “தக்வா என்றால் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள் இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு பதிலளித்தார்கள்: “அல்லாஹ்வை அஞ்சுவது, திருக்குர்ஆன் வழியில் நடப்பது, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவது, மரணத்தை எதிர்நோக்கி தயாராக இருப்பது.”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் நெஞ்சத்தைத் தொட்டுக் காட்டி, “அத்தக்வா ஹாஹுனா” (“இறையச்சம் என்பது இங்கேதான் இருக்கிறது”) என்று மூன்று தடவை சொன்னார்கள்.

ஆக, உள்ளம்தான் தக்வாவின் உறைவிடம்!

சூரா ஆல இம்ரானில் 134ம் வசனத்தில் அல்லாஹ் இத்தகைய பயபக்தியுடையோருக்கான பண்புகளைச் சொல்கிறான்.

(இறையச்சமுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)

தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (3:135)

மேற்கண்ட வசனங்களில் இறைவன் கூறும் இலக்கணங்கள் வருமாறு:

1.   இறைப்பாதையில் செலவு செய்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பேரீத்தம் பழத்தின் துண்டை தர்மமாக கொடுத்தாவது நரகிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.” (புகாரீ)

2.   கோபத்தை அடக்குதல்.

கோபத்தை அடக்குவது என்பது இறையச்சத்தின் ஒரு பகுதி. பென்னம் பெரிய நபித்தோழர்களைக் கூட இந்தக் கோபம் என்ன பாடு படுத்தியது என்பதைப் பார்ப்போம்.

ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் இடையே ஒரு வாக்குவாதம். அபூபக்கர் (ரலி) கோபப்பட்டு விடுகிறார். உடனே உமரும் (ரலி) கோபத்துடன் நகர்கிறார். தவறை உணர்ந்த அபூபக்கர் (ரலி) உமரிடம் மன்னிப்பைப் பெறுவதற்காக உமர் (ரலி) வீட்டுக்குச் செல்கிறார்.

ஆனால் உமர் (ரலி) கதவை அடைத்து விடுகிறார். அபூபக்கர் (ரலி) அண்ணலாரிடம் வந்து கவலையுடன் இதனை சொல்கிறார். இதனைக் கேட்டதும் அண்ணலாரும் கோபமாகி விடுகிறார்கள். “அண்ணலாரே, தவறுக்குக் காரணம் நான்தான்” என்றார் அபூபக்கர் (ரலி).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் தோழரை நீங்கள் கைவிடுகிறீர்களா? என்னை ஆரம்ப காலத்தில் அனைவரும் பொய்ப்படுத்தினீர்கள். அபூபக்கர் மட்டும்தான் உண்மைப்படுத்தினார்.” அந்த அவையில் உமரும் இருந்தார். உடனே உமர் (ரலி) அபூபக்கரை மன்னித்தார். அண்ணலாரும் அமைதியானார்கள்.

3.   மனிதர்களை மன்னித்தல்.

4.   பாவமன்னிப்பு தேடுதல்.

5.   பாவங்களில் தரிபடாதிருத்தல்

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

அத்தகையோருக்குரிய (நற்)கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (3:136)

இத்தகைய மன்னிப்பையும், மகத்தான ஜன்னத்தையும் பெறுவதற்கு ஒரு பயிற்சிக் காலமாகத்தான் அல்லாஹ் ரமலானை ஏற்படுத்தியுள்ளான். நம்மைக் கடந்துபோன இந்த ரமலானும் நமக்கு இந்தப் பயிற்சியை அளித்திருக்க வேண்டும்.

ரமலான் வரும்பொழுதெல்லாம் பத்ரையும், மக்கா வெற்றியையும் சுமந்துகொண்டே வருகிறது. இங்கே பத்ரை சுவர்க்கத்திற்கும், மக்கா வெற்றியை மன்னிப்பிற்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நோன்பும், குர்ஆனும் மனிதனுக்காக சிபாரிசு செய்யும். நோன்பு கூறும்: ’இறைவா! உணவு, உடல் இச்சை ஆகியவற்றிலிருந்து பகல் முழுவதும் நான் அவனை தடுத்தேன்! அதனால் அவனுக்காக என்னுடைய சிபாரிசை நீ ஏற்றுக்கொள்வாயாக!’ அப்பொழுது அந்த சிபாரிசு ஏற்றுக் கொள்ளப்படும்!” (பைஹகீ)

இந்த அடிப்படையில் நோன்பு எதிர்பார்க்கும் தக்வாவைப் பெறுவோம். திருக்குர்ஆனும், நோன்பும் நாளை சுவர்க்கத்திற்காக நம்மை சிபாரிசு செய்யும் மனிதர்களாக மாறுவோம்.

விடியல் வெள்ளி  ஆகஸ்ட் 2014

இடையனின் இறையச்சம்!

சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ஒரு காணொளிக் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தக் காலத்தில் இப்படியுமா நடக்கும் என்று அனைவரும் அதிசயித்தனர்.

ஸஊதி அரேபியாவில் ஒரு பாலைவனத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் ஏழை ஆட்டிடையனைப் பற்றிய செய்திதான் அது. அந்த ஆட்டிடையன் வெறும் இரண்டரை நிமிட காணொளிக் காட்சி மூலம் தான் ஓரிரு நாட்களில் உலகம் முழுவதும் பிரபலமாவோம் என்று ஒருபொழுதும் எண்ணியிருக்கமாட்டார். மூன்று நாட்களில் 35 லட்சம் மக்கள் தன்னை அறிவார்கள் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.

அல் தய்யிப் யூஸுஃப் என்ற அந்த சூடான் நாட்டு ஏழையிடம், காரில் வந்த இரண்டு அரபிகள் அவரது ஆட்டு மந்தையிலிருந்து ஓர் ஆட்டை தங்களுக்குத் தருமாறு கேட்டார்கள். அவரோ, “இந்த ஆட்டு மந்தை என்னுடையது இல்லை. இன்னொருவருடையது. நான் எப்படி இதை உங்களுக்கு தர முடியும்?” என்று கேட்டார்.

ஆனால் அந்த அரபிகள் 200 ரியால் தருவதாக ஆசை காட்டினார்கள். “ஆடு தொலைந்து விட்டது” என்று உரிமையாளரிடம் பொய் சொல்லச் சொன்னார்கள். “இருநூறல்ல… இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை விற்க மாட்டேன்” என்று அவர் உறுதியாகக் கூறினார்.

அரபிகள் விடவில்லை. “இங்குதான் உரிமையாளரோ வேறு யாருமோ இல்லையே, பிறகு ஏன் பயப்படுகிறீர்?” என்று மீண்டும் பணத்தாசை காட்டினார்கள். அதற்கு அவர் யதார்த்தமாகக் கூறிய வார்த்தைதான் வரலாற்றில் வாகாய் பதிந்து விட்டது. “அல்லாஹ் எங்கு சென்றான்? அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா? அவன் உங்களையும் கண்காணிக்கிறானே…” என்று பொட்டிலறைந்தாற்போல் கேட்டு விட்டு ஆட்டை விற்க உறுதியாக மறுத்துவிட்டார்.

இது உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்தபொழுது நடந்த நிகழ்வை அப்படியே நம் கண் முன் கொண்டு வருகிறது. இரவு நேரத்தில் மாறுவேடத்தில் வலம் வந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு வீட்டில் தாய்க்கும், மகளுக்கும் நடக்கும் உரையாடலைக் கேட்டார்கள். தாய் தன் மகளிடம் பாலில் கொஞ்சம் தண்ணீரைக் கலக்கச் சொல்கிறார். ஆனால் மகளோ முடியாது என்கிறார். யாரும் பார்க்கவில்லையே என்று மீண்டும் தாய் வலியுறுத்திய பொழுது, “ஏன் அல்லாஹ் இல்லையா? அவன் பார்த்துக்கொண்டிருக்கின்றானே!” என்று பொட்டிலறைந்தாற்போல் கேட்டார் அருமை மகள்.

இதனைக் கேட்டுக்கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்திலேயே அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். பின்னர் அந்தப் பெண்ணையே தன் மருமகளாகவும் ஆக்கிக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இறையச்சம் என்பது இதுதான். இரும்புக் கோட்டைக்குள் இறுக்க மூடிக்கொண்டு இருந்தாலும் இறைவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற இறையச்சம் இருந்தால் ஒருவரும் தவறிழைக்க மாட்டார்கள்.

அல்லாஹ் அருள்மறையில் இவ்வாறு கூறுகின்றான்:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு அஞ்சி ஒரு நாளைப் பற்றி பயந்து கொள்ளுங்கள். (அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவ மாட்டான். பிள்ளையும் தந்தைக்கு யாதொரு உதவியும் செய்ய மாட்டான். ஒவ்வொருவரும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும்படி நிர்ப்பந்திக்கக்கூடிய நாளாகும் அது. நிச்சயமாக (அந்நாள் வருமென்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை மயக்கி விட வேண்டாம். (ஷைத்தானாகிய) மாயக்காரனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட வேண்டாம். (திருக்குர்ஆன் 31:33)

அந்த ஒரு நாளைப் பற்றிய அச்சம் நம்மை நேர்வழியில் செலுத்திக்கொண்டே இருக்கும். அல்லாஹ்வுக்குப் பிடித்தமான குணமே இறையச்சம்தான். அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்து தன் அருள்மறையில் கூறுகின்றான். அவர்களைச் சிறப்பாக வர்ணிக்கின்றான்.

இறையச்சமுடையவர்கள் நன்மையான காரியங்களை விரைந்து செய்து முடிப்பார்கள். சுவனத்தின் உயர்தரமான இடத்தை அடைவதற்கு மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். எந்த நேரத்திலும் நற்காரியங்கள் செய்வதில் முன்னணியில் நிற்பார்கள். தானதர்மங்களை தாமதமின்றி செய்வார்கள். இயன்றவரை இயலாதவர்களுக்கு உதவி செய்வார்கள். தங்களிடம் ஒன்றும் இல்லையென்றாலும் இனிய சொற்களைக் கொண்டு மற்றவர்களை மனம் குளிரச் செய்வார்கள்.

பிறரை மன்னிப்பதில் மகிழ்ச்சி கொள்வார்கள். இரக்க குணத்தை இயல்பாகவே பெற்றிருப்பார்கள். நன்மைகள் நடக்கும்பொழுது நா தழுதழுக்க அல்லாஹ்வைப் புகழ்வார்கள். சோதனைகள் வந்தாலோ சோர்ந்து போய் விடமாட்டார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள். பாவமன்னிப்பு கேட்பதை அன்றாட வழக்கமாக்கிக்கொள்வார்கள். திக்ருகள், இஸ்திஃக்ஃபார் செய்வதில் கொஞ்சமும் சளைக்க மாட்டார்கள். ஒரு செயலைத் தவறு எனத் தெரிந்தால் உடனடியாக விட்டு விடுவார்கள். அதனை மீண்டும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்.

செல்வ நிலையிலும், வறுமையிலும் வல்லோனின் பாதையில் செலவிடுவார்கள். கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். இவர்களுக்குத்தான் அல்லாஹ் கீழ்க்கண்ட பரிசினை தயார் செய்து வைத்திருப்பதாகக் கூறுகின்றான்.

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது இறையச்சமுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)

அத்தகையோருக்குரிய (நற்)கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர். இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 3:136)

விடியல் வெள்ளி  ஏப்ரல் 2014 (மனதோடு மனதாய்...)

Friday, 28 November 2014

வாசிப்பு சமூக மேம்பாட்டின் ஆணி வேர்! - முஹம்மத் ஃபகீஹுத்தீன்



உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும்.

வாசிப்பு குறையும் போது அறிவு குறைகிறது. அறிவு குறையும் போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம்.

புராதன காலத்திலும் கூட வாசிப்பு அறிவுத் தேடலின் அடிப்படை வழியாகவே இருந்து வந்துள்ளது. எகிப்திய ஃபார்வோன்கள் தங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் உருவாக்கிய முதல் நூல் நிலையத்தில் "இங்கே ஆத்மாக்களுக்குரிய உணவும் சிந்தனைக்கு விருந்தும் உண்டு" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

வாசிப்பு மங்கி மறைந்து அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும்போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத் தரும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.

"அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்" என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ)

இதிலிருந்து இந்த உலகமும் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்க முடிகின்றது. வாழ்வும் சாவும் தங்கியிருப்பதே வாசிப்பில்தான் என்பதுதான் மேற்குறித்த ஹதீஸ் சுட்டிக்காட்டும் அர்த்தமாகும்.

இந்த மண்ணில் மிகக் குறுகிய காலப் பிரிவில் வெற்றிகரமான சமூக மாற்றத்தை தோற்றுவித்த இஸ்லாம் தனது தூதை “வாசப்பீராக” என்றே துவங்கியது. காரணம், சமூக மேம்பாட்டின் ஆணிவேர் வாசிப்பாகும்.

அந்த வகையில்தான் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றல் எனும் தேடலை மனித வாழ்வின் இலக்காக குறிப்பிட்டார்கள்.

கற்றலுக்கு அடிப்படை வாசிப்பு. வாசிப்பு இம்மை-மறுமை இரண்டிலும் வெற்றிக்கு வழிகோலும்.

வாசிப்பு அறிவின் வேராக இருந்தாலும் சமூக யதார்த்தத்தை பார்க்கும்போது கவலை தரும் வெளிப்பாடுகளையே காண முடிகிறது. வாசிப்பின் அடிப்படையில் எமது சமூத்தைப் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்:

வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிக்காதவர்கள்: வாசிப்பு முக்கியம் என்ற உணர்வு இருந்தும் சோம்பல் அல்லது நேரமின்மை காரணமாக வாசிக்காதவர்கள். உண்மையில் இவர்கள் பெரும் நஷ்டத்தில் இருப்பவர்கள்.

வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்கள்: எமது சமூகத்தின் கணிசமான பகுதி இப்பிரிவைச் சார்ந்தவர்களே. வாசிப்பின் முக்கியத்துவம் உணராமலேயே பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு பலதரப்பட்ட தொழில்களிலும் அமர்ந்து விடுபவர்கள். தூங்கும் இப்பிரிவினரை தட்டியெழுப்வுவது தார்மீகக் கடமையாகும்.

வாசிக்கத் தெரிந்தவர்கள். வாசிப்பின் முக்கியத்துவமும் அறிந்தவர்கள்: மிகக் குறைந்தளவு தொகையைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களும் இவர்களே. இவர்கள் உண்மையில் அருள் பாக்கியம் பெற்றவர்கள்.

வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிப்பதற்கான வளங்களோ வசதிகளோ அற்றவர்கள்: நூலகங்கள் கூட இவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் அமைப்பில் இல்லை என்பது கசப்பான உண்மை. எனவே வளமான நூலகங்களை அமைத்துக் கொடுப்பதில் சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

வாசிக்கத் தெரியாதவர்கள். ஆனால் வாசிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள்: ஊர்களில் ஒருவர் வாசிக்க சுற்றியிருந்து கேட்கும் மக்கள் கூட்டம் எமக்கு உணர்த்துவது இதைத்தான். இயலாது என்று ஒன்றும் இல்ல. துணிந்தால் இவர்களும் நல்ல வாசகர்களாக மாறலாம்.

வாசிக்கத் தெரியாதவர்கள். அதேசமயம் வாசிப்பின் முக்கியத்துவமும் அறியாதவர்கள்: இதற்கு ஏழ்மை, எழுத்தறிவின்மை, அறியாமை, யுத்தம், அகதி வாழ்வு போன்ற பலதரப்பட்ட காரணங்கள் இருக்கலாம். இவர்களுக்கு வாசிப்பு அதிசயமான ஒன்றாக தென்படும். சமூக மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய பகுதி இதுவே.

இந்நிலை மாற வேண்டுமாயின் வாசிப்பு ஏன், எதற்கு என்பது தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் ஆக்கமும் அழிவும் எழுச்சியும் வீழ்ச்சியும் தங்கியிருப்பது வாசிப்பின் அளவிற்கு எற்பவே.

அந்த வகையில் வாசிப்பு ஏன்? வாசிப்பின் முக்கியத்துவம், பயன்பாடுகள், வாசிப்பைத் தூண்டும் காரணிகள் யாவை என்பவற்றை சுருக்கமாக நோக்குவோம்.

வாசிப்பின் பயன்பாடுகள்

வாசிப்பு மனித வாழ்வின் ஆயுட்காலத்தை பன்மடங்காக அதிகரிக்கிறது என்பது அறிஞர் அப்பாஸ் அல்-அக்காதின் கூற்றாகும்.

எமது ஆயுட்காலத்துடன் நாம் வாசிக்கும் அறிஞர்களின், சிந்தனையாளர்களின் ஆயுட்காலமும் சேர்ந்தே எமது ஆயுட்காலம் என்பதையே அறிஞர் அக்காத் இங்கு குறிப்பிடுகிறார்.

வாசிப்பின் சில பயன்பாடுகள் பின்வருமாறு:

1) பொதுவாக வாசிப்பு அறிவின் திறவுகோல். அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகங்கள் தோன்றவே முடியாது.

2) மனிதனது ஆன்மீக, தார்மீக மேம்பாட்டுக்கும், சரியான வழிபாட்டுக்கும் இறைக் கட்டுப்பாட்டிற்கும் உதவுவது பரந்த வாசிப்பே.

3) உலக வாழ்வில் மனித சுபிட்சத்திற்கும், சமூக எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் துணையாக இருப்பது வாசிப்பாகும்.

4) உலக அறிஞர்களின் கண்டுபிடிப்பிப்புகளுக்கு பின்னால் வாசிப்பு பெரும் துணை நின்றுள்ளது. உதாரணமாக, அறிஞர் பீலே பிரான்ஸ் வேர்த் டி.வி.யை கண்டுபிடித்தவர். அவருடைய தேடலுக்கு மூலகாரணியாக அமைந்தது அவருடைய வாசிப்பு பழக்கமாகும்.
5) அறிவைப் பெறுவது ஜிஹாதை விடச் சிறந்தது என்ற கருத்தைக் கீழ்வரும் வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன:

“எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்ட ஷஹீதுகள் மறுமையில் அறிஞர்களின் அந்தஸ்தைக் கண்டு, தாங்களும் அறிஞர்களாக எழுப்பப்பட்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்." (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்)

“அறிஞனின் மையையும் ஷஹீதுகளின் இரத்தத்தையும் எடையிட்டால் அறிஞர்களின் மையே கனமாக இருக்கும்." (அல் ஹஸனுல் பஸரி)

(அறிவைப் பெறுவதற்கு வாசிப்பு அடிப்படை என்பதை கவனத்திற் கொள்க)

வாசிப்பு ஏன்?

• வாசிப்பு என்பது அறிவுக்கும் ஆன்மாவிற்கும் விருந்தாகவும் உள்ளத்திற்கு இன்பம் தரும் பொழுதுபோக்காவும் அமைகின்றது.

• ஆழான வாசிப்பு காலங்கள் மற்றும் இடங்களின் வேறுபாடுகளை நீக்கி விடுகிறது. ஒரு நல்ல வாசகன் எங்கிருந்தாலும், எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களுடன் இரண்டற கலந்து உயிரோட்டத்துடன் பழகுவான்.

• வாசிப்பு மனிதனை குறுகிய உலக வாழ்வில் இருந்து விரிந்த சிந்தனை கொண்ட பரந்த உலகிற்கு கொண்டு செல்லும்.

• இறைத் தூதை புரிந்து கொள்வதற்கும் நபிகளாரின் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கும் துணை நிற்பது வாசிப்பே.

• தான் எதிர்கொள்ளும் பிரச்னைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற, தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்துபட்ட வாசிப்புத் திறனே.

வாசிப்பைத் தூண்டும் காரணிகள்

தூய்மையான எண்ணம் கொண்டு ஆரம்பித்தல்:

“படைத்த இறைவனது நாமத்தைக் கொண்டு வாசிப்பீராக" என்று அல்குர்ஆன் கூறுவதன் மூலம், அறிவும் ஆராய்ச்சியும் ஈமானின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது இங்கு வலியுறுத்தப்படுகின்றது. எனவே இறைவனுக்காக என்ற தூய எண்ணம் வாசிப்பின் முதற்படி.

வாசிப்பு சூழல்

வாசிக்கும் சூழல் என்பது மிக முக்கியமான காரணி. ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகம் மேற்குறிப்பிட்ட சூழலை அடியோடு மாற்றியமைத்து விட்டது. நல்ல வாசிப்பு பழக்கமுள்ள குடும்ப சூழல், நண்பர்கள் வட்டம் இங்கு கவனிக்கத்தக்கது.

வாசித்தல் இலக்கு

ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிப்பதற்கு ஒதுக்குவது என்பது மட்டுமன்றி குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு நூல்களை வாசிப்பது என்பது தொடர்பான இலக்கு ஒன்றையும் அமைத்துக் கொள்வது வாசிப்பைத் தூண்டக்கூடியது.

இந்த இலக்கானது ஒரு நாளில் ஒரு மணி நேரம் வாசிப்புக்கு ஒதுக்குதல் என்பதாகவோ, மாதத்துக்கு ஒரு நூல் என்பதாகவோ அல்லது வாரம் ஒரு நூல் என்பதாகவோ இருக்கலாம். வாசிப்பை மேம்படுத்துவதற்கான முதலாவது படிநிலை இதுவே.

வாசிக்கும் இடம்

வாசிக்கும் இடத்தைத் திட்டமிடுதலும் வாசிப்பைத் தூண்டும் முக்கிய காரணியாகும். சிலருக்குப் படுக்கையில், பலருக்குக் காலைப் பொழுதில் காஃபி அருந்தும் நேரத்தில், இன்னும் சிலருக்கு மதியம் சாப்பிடுகையில், மற்றும் சிலருக்கு பேருந்து மற்றும் ரயில்கள் போன்றவையே வாசிக்கும் இடங்கள்.

வாசிப்பைத் தூண்டக் கூடிய மிகப் பொருத்தமான இடம் நூலகங்களே. நூலகங்கள் அறிவுப் பதிவேடுகளின் சுரங்கம் எனப்படுகிறது. வாசிக்கும் நேரம். ஒவ்வொரு நாளும் ஒரு ஒழுங்கில் குறித்த நேரத்தை அமைதியாக வாசிப்பதற்கு ஒதுக்குவது அவசியமாகும்.

வாசிக்கும் காலமானது தினமும் 10-15 நிமிடங்களாக இருக்கலாம். அல்லது கூடிய நேரமாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களாக அமையலாம்.

வளமான வாசிப்பு

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணி எதை வாசிப்பது என்பதுதான். இதில் துறை சார்ந்தோரின் வழிகாட்டல் இளைய தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது.

தஃப்ஸீர், ஹதீஸ், நம்பிக்கை கோட்பாடு, சட்டம், வரலாறு போன்ற கலைகளில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், கலை இலக்கிய புத்தகங்கள் மற்றும் சமூக மாற்றத்தை தோற்றுவித்த அறிஞர்கள், வழிகாட்டிகளின் வாழ்க்கைச் சரிதங்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் இளைஞர்களுக்கு மிகப் பொருத்தமானவை.

அவ்வாறே இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் தெரிவு செய்யப்பட்ட புத்தகங்கள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயன்தரத் தக்கதாக அமையும்.

வாசிப்பு ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பது பழமொழி. ஆனால் வாசிப்பு அதை விட உயர்ந்த பணியை ஆற்றுகிறது. ஒரு சமூகத்தின் இருப்புக்கும், மேம்பாட்டிற்கும் ஆணிவேராக இருப்பதே வாசிப்பாகும். வாழ்வு உண்டு இல்லை என்பதை தீர்மானிப்பதே வாசிப்புத்தான்.

காரணம் - அறிவின் அடிடப்படை வாசிப்பாகும். எனவே வாசிப்போம் வளம் பெறுவோம்.

ஆக்கம்: முஹம்மத் பகீஹுத்தீன், இலங்கை

நன்றி: http://www.kayalnews.com