Sunday, 25 October 2026

இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரைகளைக் கண்டு தளர்ந்து விட்டேன்: பில் கிளிண்டன்

சமீபத்தில் சர்வமத மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், திருக்குர்ஆனில் உள்ள சில வசனங்களை மேற்கோள் காட்டியதுடன், முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் வெறுப்புப் பரப்புரைகளைக் கண்டு தான் சோர்வடைந்துவிட்டதாகவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தன் மகள் திருக்குர்ஆனை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் பரப்புரையிலும், முன்பு நடந்த  தேர்தல் காலங்களில், டொனால்ட் ட்ரம்ப் போன்ற தலைவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம்களை இலக்காக வைத்து தீவிரமான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர்.

அமெரிக்காவில் நியூயார்க் நகர மேயர் ஸொஹ்ரான் மம்தானி போன்ற தலைவர்கள் இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரைகளுக்கு அடிபணியாமல், மக்களின் உண்மையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி வெற்றி பெற்றுள்ளனர். அத்தகைய அரசியல் மாற்றங்கள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்ச்சியான இஸ்லாமிய வெறுப்புப் பரப்புரைகள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தினாலும், அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவும், மனித உரிமைகளுக்குக் குரல் கொடுக்கவும் தயங்கவில்லை என்பதை பில் கிளிண்டனின் இந்த பிரகடனம் காட்டுகிறது.

No comments:

Post a Comment