Saturday, 2 November 2013

ஆரோக்கியமான வாழ்வுக்கு அருமையான குறிப்புகள்!


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு.

நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம்.

மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது.


தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

அல்லது குறைந்தது 30 நிமிடமாவது வேகமான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் குறைகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.


தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு நீங்கும்.

உடற்பயிற்சியினால் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். இதயம் புத்துணர்ச்சி பெறும்.

“நபிகள் நாயகத்தின் நோய் நிவாரணி” என்ற நூலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தினமும் தன் வீட்டிலிருநது பேரீச்சம்பழத் தோட்டம் வரை நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

மிதமாக உண்ண வேண்டும். மெதுவாக உண்ண வேண்டும். நன்றாகச் சவைத்து, சுவைத்து உண்ண வேண்டும்.

எச்சில் நீர் உணவில் கலப்பதற்கு ஏதுவாக வாயை மூடி சவைக்க வேண்டும்.

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

சோம்பேறித்தனம் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும்.

இயற்கை உணவே இனிய உணவு. செயற்கை பானங்கள், அதிவேகமாகத் தயாரிக்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

சாப்பிட்ட பின் உடனே படுக்கக்கூடாது. குறைந்தது அரை மணி நேரம் கழித்துத்தான் தண்ணீர் அருந்த வேண்டும்.

சாப்பிட்ட பின் உடனே படுத்தால் வயிற்றிலுள்ள உணவைச் செரிக்க சுரக்கும் அமிலம் உணவுக் குழாய் வழியாக மேலே வரும். உணவுக்குழாயின் சுவர்கள் அமிலத்தால் அரிக்கப்பட்டு, நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.


No comments:

Post a Comment