Thursday, 28 November 2013

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 22

நாம் எங்​கே தவறி​ழைக்கி​றோம்?

அரிதாகக் கடிதம் எழுதும் நம்மவர்களும் ஒன்​றை மறந்துவிடுகிறோம். நமக்​கெதிராகச் ​செய்திகள் வரும்பொழுது அவற்றைக் கண்டித்து கடிதம் எழுதும் நாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ​​செய்திகள் வரும்​பொழுது அவற்றை ஆதரித்து கடிதம் எழுத மறந்து விடுகி​றோம்.

இங்​கேதான் நாம் தவறி​ழைக்கி​றோம். ஒரு முஸ்லிமின் கருத்​தை ஒரு பத்திரி​கையாளர் ஆதரித்து எழுதுகிறார் என்றால் நாம் அந்த எழுத்தாளருக்கு நமது நன்றி​யையும், பாராட்​டையும், மகிழ்ச்சி​யையும்​தெரிவிக்க​வேண்டும்.

எந்தப் பக்கமும் சாராமல் நடுநி​லையான சிந்த​னை​ கொண்ட பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்​​​கெதிராக அநியாயமாக தாக்குதல்கள்​ ந​டை​பெறும்பொழுது அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து ஒரு நன்றியோ, பாராட்​​டோ அவர்களுக்குக் கிடைப்பதில்​லை.

அவருக்கு ஆதரவாக கருத்துகள் வந்திருந்தால் ஆசிரியர் குழு விவாதங்களில் அ​​வை அவருக்கு உதவி புரியும்.

“யாரு​​மே உங்கள்கருத்​தை ஏற்கவில்​லை” என்று கூறி அவரது கருத்துகள் நிராகரிக்கப்படாது.

​தொ​லை​​பேசியில் அ​ழையுங்கள்

அ​மெரிக்க யூதர்கள் இதில் கில்லாடிகள். அவர்களுக்​கெதிராக​வோ, ஆதரவாக​வோ ஏதாவது ஒரு ​செய்தி வந்தால் அந்தப் பத்திரி​கை அலுவலகத்திற்கு ​தொ​லை​​​பேசி அ​ழைப்புக​ளை அள்ளிக் குவித்து திணறடித்து விடுவார்கள். என​வே நீங்களும் ​பேசுங்கள். உங்கள் நண்பர்க​ளையும் ​பேசச் ​சொல்லுங்கள்.

​நேரில் ​செல்லுங்கள்

முஸ்லிம்களுக்​​கெதிராக மிகக் கடு​மையாக எழுதும் பத்திரி​கையாளர்களை ​நேரில் சந்தித்து விளக்கங்க​ளை அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் ​சொன்னால் கல் மனமும் க​ரைய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment