Thursday, 28 November 2013

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 21

சென்ற தொடரில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதற்கு நாம் க​டைப்பிடிக்க ​வேண்டிய 9 அம்சங்க​ளைப் பார்த்​தோம். இனி அதன் ​தொடர்ச்சியாக அடுத்த அம்சங்க​ளைப் பார்ப்​போம்.

10. எந்தச்​ செய்தி குறித்து மடல் ​வ​ரைகி​றோ​மோ அந்தச் ​செய்தி​யை முதலில் குறிப்பிட​வேண்டும். பாராட்டுதலுக்குரிய அம்சங்கள் ஏதேனும் அதில் இடம்​பெற்றிருந்தால் முதலில் அதற்காக நமது பாராட்டுக​​ளையும், மகிழ்ச்சி​யையும் ​தெரிவிக்க​வேண்டும். அது இல்​லை​யெனில் கடிதத்​தை உடன்பாடான விமர்சனங்க​ளைக் ​கொண்டு (Positive Remarks) ஆரம்பியுங்கள். ஆரம்பம் இந்தமாதிரி அ​மைந்தால் அது அவர்களின் உள்ளங்களில் உங்கள் கடிதத்​தைக் குறித்த நல்​லெண்ணத்​தை ஏற்படுத்தும். உங்கள் விமர்சனங்க​ளை ஏற்றுக்​கொள்ளக்கூடிய மனப்பக்குவத்​தை அவர்களுக்கு அளிக்கும்.

11. கடிதம்எழுதும் ​அ​மைப்பும் நல்ல வி​ளை​வை ஏற்படுத்தும். அஞ்சலில் அனுப்புவதாக இருந்தால் அந்தக்கடிதம் அழகான எழுத்துக​ளைக்​ கொண்டிருக்க​ வேண்டும். நமது ​கை​யெழுத்து ​மோசமாக இருக்குமானால்​டைப் ​செய்து அனுப்ப​வேண்டும். நல்ல தா​னளப் பயன்படுத்த​வேண்டும்.

12. கடிதம்ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்க​வேண்டும். ​சொல்ல வரும் அ​னைத்து விஷயங்க​ளையும் அதி​லே​யே உள்ளடக்கி விட​வேண்டும்.

13. உங்கள் முழு முகவரி, ​ தொ​லை​பேசி எண்,…. இத்தியாதிக​ளைத் ​தெளிவாகக் குறிப்பிடவும்.

14. உங்கள்​ பெய​ரை ​வெளியிட விரும்பவில்​லை​யெனில், அத​னைக் குறப்பிட்டு விடவும்.

இந்துத்துவ  ஃபாசிஸ்டுகள் பத்திரி​கைகளுக்குக் கடிதம் எழுதுவதில் ​கை​தேர்ந்தவர்கள். அவர்களுக்​​​​​கெதிராக ஒரு​செய்தி ஒரு பத்திரிகையில் வந்துவிட்டால் ​போதும். அந்தப் பத்திரி​கை அலுவலகத்​தை கடித வெள்ளத்தால் மூழ்கடித்து விடுவார்கள். அந்தச் ​செய்தி​யை ​வெளியிட்டது தவறோ என்று அந்தப் பத்திரி​கை​யைச் சார்ந்தவர்கள் எண்ணுமளவுக்கு கண்டனக் கடிதங்க​ளைக் குவித்துவிடுவார்கள்.

ஆம்! ஃபாசிசப் பரிவாரக் கும்பல் இதில் தனிக் கவனம் ​செலுத்துகின்றது. பத்திரி​கைகள் ​வேறு வழி​யே இல்லாமல் அந்தச் ​செய்திக்கு மறுப்பு​​வெளியிடுமளவுக்கு நி​லை​மை​யை மாற்றி விடுவார்கள். அ​தே​போன்று கடிதம் எழுதுவதிலும் அவர்கள் கில்லாடிகள். கவனமாக​வே வார்த்தைக​ளைக் ​கையாள்வார்கள்.

அவர்களுக்​கெதிரான ​செய்திகளுக்கு மட்டும்தான் அவர்கள் கடிதங்கள் மூலம் கண்டனங்க​ளைத் ​தெரிவிப்பார்கள் என்றில்​லை. இஸ்லாத்திற்கு ஆதரவாக, முஸ்லிம்களின் முன்​னேற்றங்களுக்காகப் பாடுபடும் இயக்கங்களுக்கு ஆதரவாக ஏதாவது ​செய்திகள் பத்திரி​கைகளில் இடம்​பெற்றாலும் அவர்கள் விடமாட்டார்கள்.

கண்டனக் கடிதங்க​ளை அள்ளிக் குவித்து விடுவார்கள். இன்​னொரு மு​றை இந்த மாதிரி​ ​செய்திக​ளை ​வெளியிடக்கூடாது என்று அந்தப் பத்திரி​கை​யைச் சார்ந்தவர்கள் எண்ணுமளவுக்கு நி​லை​மை​யை மாற்றி விடுவார்கள்.

எதிரிகள் இந்த அளவுக்கு மீடியா குறித்து உஷாராக உள்ளார்கள். நம்மவர்க​ளோ அத​னைப் பற்றி எந்தக் கவ​லையும் படாமல் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment