விடியல் வெள்ளி மாத இதழில் வெளிவந்த இம்பாக்ட் பக்கம் கட்டுரைகளின் தொகுப்பு - பாகம் 1
நூல் அறிமுகம்
இம்பாக்ட் இண்டர்நேஷனல் என்றொரு ஆங்கிலப் பத்திரிகை லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அதனைத் திறந்தவுடன் முதல் பக்கத்திலேயே First Things First என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று இடம் பெற்றிருக்கும்.
இன்றைய பிரச்னைகளை அலசி, அதற்கு இஸ்லாமியத் தீர்வை மிக அழகாகச் சொல்லியிருப்பார்கள் அந்தப் பக்கத்தில்.
அதனைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்று அவா கொண்டோம். அதனால் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை விடியல் வெள்ளி மாத இதழில் நடுப்பக்கக் கட்டுரையாகக் கொண்டு வந்தோம். அந்தப் பக்கத்திற்கு “இம்பாக்ட் பக்கம்” என்றே பெயர் வைத்தோம்.
முடிந்த வரை மூலமொழியின் சுவை குன்றாமல் அதே விறுவிறுப்புடன் இதனை மொழிபெயர்த்துள்ளேன். வாசகர்களிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
வாசகர்கள் இதனை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்று விழைந்தனர். ஆதலால் “தேசியவாதமும் இஸ்லாமும்” என்ற பெயரில் முதல் பாகம் நூலாக வெளிவந்தது.
எல்லா இஸ்லாமியப் பத்திரிகைகளுக்கும் ஏற்படும் நெருக்கடி இம்பாக்ட் இண்டர்நேஷனல் பத்திரிகையையும் விட்டு வைக்கவில்லை. அதுதான் நிதி நெருக்கடி! நிதி நெருக்கடியினால் அந்தப் பத்திரிகையை நிறுத்தி விட்டனர்.
நூல் : தேசியவாதமும் இஸ்லாமும்
மூலம் : இம்பாக்ட் இண்டர்நேஷனல், லண்டன் (Impact International, London)
தமிழில் : M.S. அப்துல் ஹமீது
விலை :
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி : +91 44 25610969
தொலைநகல் : +91 44 25610872
மின்னஞ்சல் : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com
No comments:
Post a Comment