Friday, 18 October 2013

சிறையில் எனது நாட்கள்


ஒரு கஷ்மீர் பத்திரிகையாளரின் சிறை அனுபவங்கள்!

இஃப்திகார் ஜீலானி



இஃபிதிகார் ஜீலானி ஓர் அறிமுகம்

இஃப்தகார் ஜீலானி கடந்த 14 வருடங்களாக பத்திரிகைத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.

வெளிநாட்டு, உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும், நாளேடுகளிலும் பணியாற்றியுள்ள இவர், தற்பொழுது கஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டில் டெல்லி தலைமைச் செய்தியாளராக உள்ளார்.


ரேடியோ டச்சு வெல்லி (வாய்ஸ் ஆஃப் ஜெர்மனி) என்ற வானொலியிலும் செய்தியாளராக உள்ள இஃப்திகார், பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ், ஃப்ரைடே டைம்ஸ், கப்ரைன் ஆகிய பத்திரிகைகளின் இந்திய செய்தியாளராகவும் பணிபுரிகிறார்.


நூல் அறிமுகம்

2002 ஜூன் 9ம் தேதி, அதிகாலை 4.30 மணிக்கு தனது வீட்டுக் கதவை யாரோ தட்டுவது கேட்டு கண் விழித்தார் இஃப்திகார் ஜீலானி. தூக்கக் கலக்கத்துடன் கதவைத் திறந்தவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆயுதந்தரித்த போலீஸ்காரர்கள் கூட்டம் ஒன்று வீட்டினுள்ளே பாய்ந்தது. நேற்று வரை பத்திரிகையாளராக இருந்த தான், இன்று ஓர் ஐ.எஸ்.ஐ. ஏஜண்டாக மாற்றப்பட்ட விவரம் இப்படித்தான் ஜீலானிக்குத் தெரிய வந்தது.

ஆம்! ஒரே இரவில் ஒரு பத்திரிகையாளர் பாகிஸ்தான் உளவாளியாக மாற்றப்பட்டார்.

செய்த குற்றம்: இணையதளத்திலிருந்து யாரும் பதிவிறக்கம் (download) செய்து கொள்ளக்கூடிய பழைய சில தகவல்களைக் கணிப்பொறியில் வைத்திருந்தது.

இதற்கான தண்டனை: 14 வருட சிறைவாசம்!

இதன் பிறகு 7 மாதங்கள் திகார் சிறையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகள், ரத்தம் உறைய வைக்கும் அனுபவங்கள், சித்தம் கலங்க வைக்கும் சித்திரவதைகளை அணுஅணுவாக விவரிக்கிறது இந்நூல்.

முஸ்லிம்கள், அதிலும் அவர்கள் கஷ்மீரில் பிறந்தவர்களாக இருந்தால் என்னென்ன கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுவார்கள் என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்நூல்.

பின் அட்டை
நூல்          : சிறையில் எனது நாட்கள்
மூலநூல் : My Days in Prison by Iftikhar Gilani
ஆசிரியர் : இஃப்திகார் ஜீலானி
தமிழில்   : M.S. அப்துல் ஹமீது
விலை     : ரூ. 60
வெளியீடு/கிடைக்குமிடம் : இலக்கியச்சோலை
25, பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி                            : +91 44 25610969
தொலைநகல்                           : +91 44 25610872
மின்னஞ்சல்                             : ilakkiyacholai@gmail.com, vidialvelli@gmail.com

No comments:

Post a Comment