Sunday, 27 October 2013

ஃபாசிஸ்டுகள் ஏற்றிய பாகிஸ்தான் ​கொடி - நயவஞ்சக வரலாற்றின் ​​தொடர்ச்சி!

விடியல் வெள்ளி பிப்ரவரி 2012 இதழில் வெளியான கட்டுரை



முஸ்லிம்களுக்கெதிராக மீண்டும் ஒரு கலவரத்தைத் தூண்ட முயற்சிசெய்துள்ளார்கள் ஃபாசிஸ்டுகள். தக்கநேரத்தில் காவல்துறை ஸ்ரீராம் சேனா என்ற ஃபாசிச பயங்கரவாத கும்பலைக்கைதுசெய்ததால் ஒருபெரும் கலவரம் தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 1ம்தேதி புது வருடப் பிறப்பன்று பிஜாப்பூர் மாவட்டம் சிந்தகி என்ற இடத்திலுள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஃபாசிஸ்டுகள் யாருக்கும்தெரியாமல் இரவோடு இரவாக பாகிஸ்தான்கொடியை ஏற்றிவிட்டார்கள்.

மறுநாள் வழக்கம் போல் அங்குள்ள மீடியா அத்தனையும் விஷத்தைக் கக்க ஆரம்பித்தன. முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் இதற்குக் காரணம் என்றும், அவர்களை வே​​ரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியவேண்டும் என்றும் பல தைகள் வெளிவந்தன.

இன்னும் சில கன்னடப் பத்திரிகைகள் பாகிஸ்தான் ஏஜண்டுகள்தாம் இதனைச்செய்துள்ளனர் என்று அங்கலாய்த்தன. அதன்பிறகு நடந்த நிகழ்வுதான் உச்சகட்டகொடுமை.

ஃபாசிச பயங்கரவாத மைப்புகளான பஜரங்தள், ஸ்ரீராம்சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகியவை இந்தச் சம்பவத்தைக் கண்டிக்கும் முகமாக அந்தப் பகுதியில் ஒரு நாள் பந்துக்கு ழைப்பு விடுத்தார்கள். இந்த பந்தின்நோக்கமே முஸ்லிம்களுக்கெதிராக உணர்வுகளைத் தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துவதுதான். அதற்குத் துணையாக அவர்கள் முஸ்லிம்களின் டைகளையும், வாகனங்களையும் தாக்கினார்கள்.

ஆனால்பெங்களூரில் ஆறு ஸ்ரீராம்சேனா பயங்கரவாதிகள்கைதுசெய்யப்பட்டவுடன் இந்தப் பயங்கரவாதிகள் தங்கள் வா​​லைச் சுருட்டிக்கொண்டார்கள். பிஜாப்பூர்போலீஸ்சூப்பிரண்டென்டால்கைதுசெய்யப்பட்டஇந்த ஆறுபேரும் கல்லூரி மாணவர்கள்.

அவர்களை காவல்து​​றை விசாரணைசெய்தபொழுது ஸ்ரீராம்​​சேனாவுக்கு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெறுவதற்காக கலவரத்தைத் தூண்டுவதற்காகவே இதனைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்கள்.
தேசபக்தி உணர்வுகள் தூண்டப்பட்டு அது தங்களுக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் மாறும் என்று அவர்கள் எதிர்பார்த்தே இந்தச் சதித் திட்டத்​​தைத் தீட்டியுள்ளார்கள்.

ஆனால் வழக்கம்போல் தங்கள் இயக்கத்தினர் கைதானவுடன் ஸ்ரீராம்சேனாவின் லைவர் பிரமோத் முதாலிக் இவர்கள் எங்கள் இயக்கத்தினர் அல்ல, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் இவரையும்கைதுசெய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தே சாட்சாத் பிரமோத் முதாலிக்தான்டெகல்கா றைமுகமாகப் பதிவுசெய்த வீடியோவில் சிறுபான்மையினருக்கெதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கும் அதற்கான னைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்கும் பணம்கேட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த இலட்சணத்தில் காவல்துறை ஸ்ரீராம் சேனாவுக்​​கெதிராக நிறைய திட்டங்களை வைத்துள்ளது என்று வேறு இவர் கூறுகிறார்.​

தென் கன்னட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட ​​லைவர் ராம்நாத் ராய் ஸ்ரீராம் சேனாஇத்தகையதேசவிரோதச் செயலில் ஈடுபட்டதால் தனைத் டைசெய்ய ​​வேண்டும் என்று கோரிக்​​கை விடுத்துள்ளார். கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஓட்டுகளை அள்ளுவதற்காகவே சங்க் பரிவார் இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார் ஜனதா தள் (எஸ்) லைவர் H.D. குமாரசாமி.

கையில் இஸ்மாயீல் என்று பச்​​சை குத்தி நாதுராம் கோட்சே என்ற சனாதன ஃபாசிஸ்டு காந்தியைச் சுட்டுக் கொன்றதிலிருந்து இந்த நயவஞ்சக வரலாறு​ ​தொடர்கிறது.

தங்கள் ஃபாசிசக் கொள்கைகளை வளர்ப்பதற்காக தங்கள் சொந்த மக்களை
யே இவர்கள் கொல்வதற்கு எந்தத் தயக்கமும் காட்டமாட்டார்கள்.
தே ஸ்ரீராம் சேனா கர்நாடகாவில் விவேகானந்தர் சி​​லையைக் களங்கப்படுத்தியது. ஒரு கோவிலையும் களங்கப்படுத்தியது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு இவற்றைச் செய்தது முஸ்லிம்கள்தான் என்று முஸ்லிம்களுக்​​கெதிராக ஹிந்துத்துவவாதிகள் வெறுப்புப் பிரச்சாரத்தைமேற்கொண்டனர்

ஏன், 2008லும் ​​தே மாதிரி பாகிஸ்தான் கொடியை திப்பு சுல்தான் சர்க்கிள் என்ற இடத்தில் ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள் ஏற்றி விட்டு பழியை முஸ்லிம்கள் போட்டார்கள்.

தென்காசியில் தங்கள் சொந்த அலுவலகத்திலேயே குண்டு ​​வெடிக்கச்செய்து பழியை முஸ்லிம்கள் மேல் போட்டார்கள்.

இத்தகைய ஃபாசிஸ்டுகள் இருக்கும் ரை இந்த நயவஞ்சக வரலாறுதொடர்ந்துகொண்டேதான் இருக்கும். இந்த நயவஞ்சக வரலாறு முடிவுக்கு வர வேண்டுமென்றால் இந்த ஃபாசிஸ்டுகளுக்கு நாம் ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.

MSAH

No comments:

Post a Comment