‘டைம் வார்னர்’ என்றொரு நிறுவனம். இது இன்னொரு முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம். இது ‘டைம்’ பத்திரிகை, HBO, CNN, அமெரிக்கா ஆன்லைன் ஆகிய செய்திச் சேனல்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
TW என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘டைம் வார்னர்’ நிறுவனம் நல்ல ஒருங்கிணைக்கப்பட்ட ஊடக நிறுவனம். இது வெளியிடும் ‘டைம்’ பத்திரிகை உலகிலேயே மிகப் பிரபலமானது. உலகம் முழுவதும் இதற்கு 40 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் பழைய கணக்கு. இப்பொழுது இன்னும் பல லட்சம் பிரதிகள் அது கூடுதலாக விற்பனை செய்கிறது.
நாம் முன்பே பார்த்த ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் ஒரு ஜெர்மன் நாட்டு யூதரால் தொடங்கப்பட்டது. இவர் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ‘ராய்ட்டர்ஸ்’ ஆங்கிலேயர் ஆக்கிரமித்திருந்த அத்தனை காலனி நாடுகளுக்கும் தன் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தது.
Associated Press என்றொரு செய்தி நிறுவனம். இன்று அமெரிக்காவுக்கு வெளியே உலகிலுள்ள பல நாளிதழ்களும், ஒளிபரப்பாளர்களும் AP என்ற இந்த Associated Press செய்தி நிறுவனத்தின் சந்தாதாரர்கள். செய்திகளுக்காக அவை இந்தச் செய்தி நிறுவனத்தையே சார்ந்திருக்கின்றன.
2005ம் ஆண்டு AP தந்த செய்திகளை 1700 நாளிதழ்கள் பயன்படுத்தின. 5000 வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் பயன்படுத்தின. APக்கு 242 செய்தி பியூரோக்களும், 121 மையங்களும் உள்ளன.
‘யுனைட்டட் பிரஸ் இண்டர்நேஷனல்’ என்ற செய்தி நிறுவனம் மூடப்பட்டவுடன் சர்வதேச அளவில் வலைப்பின்னல் உள்ள ஒரே அமெரிக்க செய்தி நிறுவனமாக AP திகழ்கிறது.
இப்படி பெரும்பாலான, முக்கியமான உலக ஊடகங்கள் முழுவதும் செய்திகளுக்குச் சார்ந்து நிற்கின்ற AP செய்தி நிறுவனம் அமெரிக்க, ஸியோனிஸ யூதக் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படியென்றால் செய்திகள் என்ன இலட்சணத்தில் இருக்கும் என்பது இப்பொழுது விளங்குகிறதல்லவா!
நாம் முன்பே கண்ட AFP என்ற செய்தி நிறுவனம்தான் உலகிலேயே மிகப் பழமையான செய்தி நிறுவனம். பாரிசைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்தச் செய்தி நிறுவனத்தை ஒரு ஃபிரஞ்சுக்காரர்தான் நிறுவினார்.
AFPயும் உலகளாவிய அளவில் இயங்குகிறது. ஆனால் இது ஃபிரான்சின் கட்டுப்பாட்டிலிருந்த நாடுகளுக்குத்தான் செய்திகளை வழங்கி வருகின்றது.
Deutsche Presse Agentur (DPA) என்பது இன்னொரு செய்தி நிறுவனம். ஆனால் இதன் எல்லை மிகக் குறுகியது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே தனது செய்திகளை வழங்கி வருகின்றது.
சில முன்னணி நாளிதழ்கள் உலக மக்களின் மொத்தக் கருத்தையும் மாற்றும் சக்தி வாய்ந்தவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த அத்தனை நாளிதழ்களும் மேலைநாடுகளைச் சார்ந்ததே.
தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகியவை மிகப் பிரபலமான அமெரிக்க நாளிதழ்கள். இந்த நாளிதழ் ஜாம்பவான்கள் நினைத்தால் ஒரு நாட்டை ஒன்றாக இருக்கவும் வைக்கலாம். பிளந்து போடவும் செய்யலாம். அந்த அளவுக்கு அந்த நாளிதழ்கள் செல்வாக்கு படைத்தவை, மூலை முடுக்கெங்கும் ஆழமாக ஊடுருவி நிற்பவை.
No comments:
Post a Comment