பத்திரிகையாளர்களுடன் தொடர்புகளை வலுப்படுத்துங்கள்
தனிப்பட்ட முறையில் நட்புகளை வளர்த்துக்கொள்வது பல வழிகளிலும் நன்மை பயக்கும். நல்ல ஒரு முஸ்லிமை நண்பனாகக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் அந்த முஸ்லிம் சார்ந்த சமுதாயத்திற்கெதிராக எழுதுவதற்கு ஒரு தடவைக்கு பல தடவை யோசிப்பார். இஸ்லாத்திற்கெதிராக எழுதுவதற்கு இஸ்லாம் பற்றிய அறியாமையும், முஸ்லிம்களுடனான தொடர்பின்மையும்தான் மிக முக்கிய காரணம்.
ஆதலால் உங்களுக்கு அருகில் ஊடகத்தில் தொடர்புடையவர் யார் இருக்கிறார் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நகரங்களில் வசிப்பவர்கள் உங்கள் வார வேலைத் திட்டத்தில் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதையும் ஒரு வேலையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள். இது மிக்க பலன்களைத் தரும்.
ஊடகக் கண்காணிப்பு (Media Watch) குழுக்களை உருவாக்குங்கள்
கடிதம் எழுதுவது, தொலைபேசி அழைப்புகள், தனிப்பட்ட தொடர்புகள், இன்னபிற ஊடகம் சம்பந்தமான செயல்பாடுகளுக்கு ஓர் ஒழுங்கு முறை, தொடர் கண்காணிப்புகள் அவசியம்.
ஆதலால் உங்கள் பகுதிகளில் ஊடகக் கண்காணிப்புக் குழுக்களை உருவாக்குவது குறித்து சிந்தியுங்கள். இந்தக் குழுவில் உள்ளவர்கள் படித்தவர்களாகவும், ஊடகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து அறிந்தவர்களாகவும் இருக்கவேண்டும். ஊடகம் சம்பந்தமாக ஏதாவது வேலைகள் கொடுக்கப்பட்டால் அதனைச் செய்வதற்கு நேரம் ஒதுக்கக்கூடியவராகவும் அவர் இருக்கவேண்டும்.
நீங்கள் இவ்வளவு முயற்சி செய்தும் நீங்கள் தொடர்பு கொண்ட தினப் பத்திரிகையோ, தொலைக்காட்சிச் சானலோ உங்கள் கருத்துகளைக் கேட்க மறுக்கலாம்.
வெளியிடப்பட்ட ஒரு செய்திக் குறிப்பாலோ, ஒரு கட்டுரையாலோ நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டால், அந்தச் செய்திக்கு நீங்கள் அனுப்பிய மறுப்பை அவர்கள் வெளியிட மறுத்தால் அதற்குப் பரிகாரமாக பல வழிகள் உள்ளன.
இனி அடுத்ததாக இன்ஷா அல்லாஹ் மின்னணு ஊடகங்கள் குறித்து பார்ப்போம்.
No comments:
Post a Comment