பிரஸ் கவுன்சிலை நாம் எப்படி அணுகுவது, எந்த முறையில் புகாரைப் பதிவுசெய்வது, எந்தெந்த ஆவணங்களை இணைத்து அனுப்புவது போன்றவை குறித்து சென்ற தொடரில் கண்டோம்.
பிரஸ் கவுன்சிலின் முகவரி இதோ:
Press Council of India
Soochana Bhavan
8, CGO Complex, Lodhi Road
New Delhi - 110 003
Web : www. presscouncil.nic.in
Email : pcids@vsnl.net <mailto:pcids@vsnl.net>
மாற்று ஊடகத்தை நோக்கி…
மீடியாவை எப்படி அணுகுவது, பத்திரிகைகளுடன் எப்படி தொடர்புகொள்வது, அவற்றிற்கு மறுப்பு எழுதுவது எப்படி போன்றவற்றை இதுவரை கண்டோம்.
இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் குறித்து தவறாக வெளிவந்த செய்திகளுக்கு அவ்வப்பொழுது சில மறுப்புகள் வெளிவந்திருக்கலாம். இஸ்லாம் அல்லது முஸ்லிமகள் குறித்து நல்லவிதமான செய்திகள் எப்பொழுதாவதுவெளிவந்திருக்கலாம்,
ஆனால் இன்றும் ஒரு நிலைமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. நமது ‘’மீடியா மாஸ்டர்கள்’’ ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அவல நிலை குறித்து அவ்வளவாகக் கவலை கொள்வதில்லை என்பதுதான் அந்தத் துயரமான உண்மை. குறிப்பாக முஸ்லிம்கள் என்றால் கேட்கவே தேவையில்லை.
ஆக, நமது குரல் உலகுக்குக் கேட்க வேண்டுமென்றால், நமது அவல நிலை அகிலத்திற்கு அறிய வேண்டுமென்றால் நாம் மீடியாவில் கால் பதித்தே ஆகவேண்டும். ஒரு மாற்று ஊடகத்தை உருவாக்கியே ஆகவேண்டும். இது காலத்தின் கட்டாயம்!
இன்று முஸ்லிம் உலகில் என்ன நிலை என்று பாருங்கள். இன்று முஸ்லிம் நாடுகள் தங்கள் அக்கம் பக்கம் நடக்கும் செய்திகளை அறிவது கூட மேலை நாட்டு காலனியாதிக்க மீடியா ஜாம்பவான்களின் கருணையினால்தான்!
முஸ்லிம் நாடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ சேர்ந்து நம்பகமான ஒரு செய்தி நிறுவனத்தை (News Agency) நிறுவ முடியவில்லை. இதனால் முஸ்லிம் நாடுகள் தங்களைப் பற்றிய சரியான செய்திகளையும், கருத்துரைகளையும் வெளிக்கொண்டு வர முடியவில்லை. தங்களின் நிலையை உலகுக்கு உணர்த்த முடியவில்லை.
இருப்பினும் யாராவது உறுதியுடன் இதற்கு முயற்சி எடுத்தால் அதன் விளைவோ பிரமாதமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் வெளிவரும் ஒரு சில இஸ்லாமிய இதழ்களை அதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம்.
பொதுவான மீடியாவில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்தும் உண்மையான செய்தி குறித்தும் குறைந்தபட்சம் முஸ்லிம் வாசகர்களையாவது அவற்றால் தெளிவு படுத்த முடிகிறது.
பொதுவான மீடியாவில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மை குறித்தும் உண்மையான செய்தி குறித்தும் குறைந்தபட்சம் முஸ்லிம் வாசகர்களையாவது அவற்றால் தெளிவு படுத்த முடிகிறது.
அதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் ‘’அல் ஜஸீரா’’ (Al Jazeera) தொலைக்காட்சி!
இந்தத் தொலைக்காட்சி சானல் இல்லையென்றால் ஆஃப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் பல கொடுமையான நிகழ்வுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருக்கும். வெளயுலகிற்கு அந்த உண்மைகள் வெளிவராமலேயே வெந்துபோயிருக்கும்.
No comments:
Post a Comment