பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது நாம் ஏற்கனவே பார்த்தபடி சட்டரீதியான அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பு.
பிரஸ் கவுன்சில் (விசாரணைக்கான முறை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் கீழ் யார்வேண்டுமானாலும் பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட மனிதரோ, நேரடியாக ஈடுபட்ட மனிதரோதான் புகார் அளிக்கவேண்டும் என்றில்லை. பத்திரிகைத்துறையின் தொழில் தர்மம் மீறப்பட்டதாக பொதுமக்களில் யார் கவனித்தாலும் அவர்கள் இதனை பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு வரலாம்.
பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கும் முன்பு அல்லது வழக்கு பதிவு செய்யும் முன்பு சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு அல்லது செய்தி நிறுவனத்துக்கு அல்லது பத்திரிகையாளருக்கு மறுப்பு அளித்திருக்க வேண்டும். அதாவதுசெய்தி வெளிவந்தவுடன் அதற்கான மறுப்புக் கடிதத்தை அவர் அனுப்பியிருக்க வேண்டும்.
பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கும் பொழுது அந்த மறுப்புக் கடிதத்தையும் சம்பந்தப்பட்ட பத்திரிகையிலிருந்து பதில் எதுவும் வந்திருந்தால் அதனையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பத்திரிகையிலிருந்து உரிய கால அளவில் பதில் வரவில்லையென்றால் அதனைப் பற்றிக் கவலைபப்படத் தேவையில்லை. நாம் அனுப்பிய மறுப்புக் கடிதத்தை மட்டும் இணைத்தால் போதுமானது.
பிரஸ் கவுன்சிலில் புகார் அளிப்பவர் சம்பந்தப்பட்ட பத்திரிகையின் அல்லது செய்தி நிறுவனத்தின் அல்லது ஆசிரியரின் அல்லது செய்தியாளரின் பெயரையும் முழு முகவரியையும் கொடுக்க வேண்டும். அத்தோடு மறுப்புக்குரிய அந்தச் செய்தியின் மூலப் பிரதியையும் (original) இணைக்க வேண்டும். மறுப்புக்குரிய செய்தி காட்சியாக (visual) வெளிவந்திருந்தால் அந்தச் செய்தியின் பகுதியை (clipping) ஒரு குறுந்தகட்டில் (CD) பதிவு செய்து புகாருடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பிரஸ் கவுன்சில் (விசாரணைக்கான முறை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் பிரிவு 14 (1)ன் அடிப்படையில் இந்தச் செய்தி எப்படி மறுப்புக்குரியது என்பதை புகார் அளிப்பவர் தனது புகாரில் விவரிக்க வேண்டும்.
அந்த மறுப்புக்குரிய செய்தி ஆங்கிலமல்லாத வேறு மொழியில் இருக்குமானால் ஆங்கிலத்தில் அந்தச் செய்தியையும் அதற்கு நாம் அனுப்பிய மறுப்பையும் மொழிபெயர்த்து அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment