மாவீரன் திப்பு சுல்தான் மிகப் பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை இருந்தன. போரில் பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகளையும், ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளையும் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட்-ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
திப்பு பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்களும், பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டப்படியான விசாரணையும், தண்டனையும் அமைய வேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment