இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் என்னை உடனடியாக படிக்கத் தூண்டிய புத்தகம்தான் "துரோகி".
காரணம், அதனுடைய தலைப்பு என்னை கவர்ந்தது. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இரண்டே நாளில் வாசித்து முடித்தேன் அந்தப் புத்தகத்தை.
மிக அற்புதமான அனுபவக் கட்டுரையை தந்துள்ளார் 'டெர்ரி ஹொல்ட்புரூக்ஸ்'. தமிழில் அதனை மிக எளிமையாக தந்திருக்கிறார் M.S.அப்துல் ஹமீது அவர்கள்.
கட்டுரையாளர் ஓர் அமெரிக்க இராணுவ வீரர். எதிர்பாராத விதமாக கியூபாவிலுள்ள குவாண்டனாமோ சிறைச்சாலையில் அவர் பணி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார். அங்கு, தான் கண்ட அனுபவத்தையும், அதனால் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும் விவரிக்கும் அற்புதமான பயணம், இறுதியில் இஸ்லாமில் முடிகிறது.
அவரை இஸ்லாமின் பக்கம் இழுத்த காரணிகளில் மிக முக்கியமானது,
முஸ்லிம்கள்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் அவர் கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு, சரியான விளக்கத்தை சிறைக் கைதிகளிடம் காண்பது மட்டுமல்லாமல் நேரடியாக பார்க்கிறார், உணர்கிறார்.
நூலில், குவாண்டனாமோ சிறையையும் அங்கு கைதிகளுக்கு தரப்படும் தண்டனை பற்றிய விவரிப்பும் அதிர்ச்சி ரகம்.
அமெரிக்க மக்களின் ஒட்டுமொத்த சிந்தனைத் தொகுப்பையும் கட்டுரையாளர் மிக அழகாக விளக்குகிறார்.
எழுத்துநடை மிக எளிதாக வேகமாக வாசிக்க தூண்டுகிறது. மொழிபெயர்ப்பு மிக அற்புதம். எல்லோரும் வாசிக்க வேண்டிய நூல்.
கட்டுரையாளர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் கைதிகளிடம் பேசியதாலே துரோகியாக்கபட்டார் என்பது சுவாரஸ்யமானது. படித்துப் பாருங்கள். நல்ல அனுபவம்.
மொழிபெயர்ப்பாளர் சகோதரர் அப்துல் ஹமீத் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதிகை வசந்தன் (நெல்லை நியாஸ்)

No comments:
Post a Comment