Tuesday, 15 October 2013

துபையில் தியாகத் திருநாள் குதூகலம்!

அனவைருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் இன்று (15.10.2013) துபையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


துபை தேராவிலுள்ள ஈத்காஹ் திடலில் நானும், என் நண்பர்கள்  பலரும் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டோம். தக்பீர் முழக்கங்கள் முடிந்தவுடன் சரியாக காலை 6.40 மணிக்கு தொழுகை ஆரம்பித்தது. அதன்பிறகு குத்பாப் பேருரை நிகழ்த்தப்பட்டது.


குத்பாப் பேருரை முடிந்தவுடன் மக்கள் ஒரவருக்கொருவர் ஆலிங்கனம் செய்து தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.


வழக்கமாக என் நண்பர்கள் குழுமும் இடத்தில் வழக்கம் போல் அனைத்து நண்பர்களையும் சந்தித்து, கட்டிப் பிடித்து, பெருநாள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டேன்.


அத்தோடு எனதூரான காயல் பட்டணத்தின் சகோதரர்களில் பெரும்பாலோரைச் சந்தித்தேன். பரஸ்பரம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். எங்கும் குதூகலம் நிரம்பி வழிந்தது.


இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவு கூரும் ஈதுல் அழ்ஹா என்ற தியாகத் திருநாள் தினம் இது.


அரபுலகம் எங்கும் இன்று தியாகத் திருநாள் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. துபையைப் போன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன், ராசல்கைமா போன்ற இடங்களிலும் பெருநாள் தொழுகைகள் ஈத்காஹ் திடல்களில் சிறப்பாக நடந்தேறியது.


துபையில் காலை 6:00 மணி முதலே மக்கள் தேராவிலுள்ள ஈத்காஹ் திடலை நோக்கி அலை மோதத் தொடங்கினர். பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். பல்வேறு நாட்டைச் சார்ந்த, பல நிறத்தவரைக் கொண்ட, பல மொழிகளைப் பேசுகிற மக்களை அங்கே பார்க்கும்பொழுது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமும், சர்வதேச இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வும் ஏற்பட்டது.






2 comments:

  1. முகமறிந்த மற்றும் முகமறியா சகோதரர்களை பார்க்கும் வாய்ப்பு. மீண்டும் நேரில் பார்க்க வல்ல ரகுமான் துணைபுரிவானாக

    ReplyDelete
  2. செய்தி அழகு! ஈத் முபாரக்!

    ReplyDelete